தமிழக காங்கிரசில் மீண்டும் கோஷ்டி பூசல்
சென்னை:
தேர்தல் வெற்றியை கொண்டாட காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் நடத்திய விருந்தில் கோஷ்டிபூசல்பகிரங்கமாக தெரிந்தது. இந்த விருந்தில் இளங்கோவனின் எதிர் கோஷ்டி தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்டது முதலே முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சிதலைவர்களான தங்கபாலு, திண்டிவனம் ராமமூர்த்தி, மற்றும் எம்.பி.சுப்ரமணியமமும், முன்னாள் மத்திய அமைச்சர்அருணாசலம் ஆகியோர் இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி தனித்தனியாக செயல்பட்டு வந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலின் போது இவர்களிடையே ஒற்றுமை காணப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்த பின்மீண்டும் கோஷ்டி பூசல் துவங்கி விட்டது.
தமிழக தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மூப்பனார்கூட்டணி கட்சிகளுக்கு விருந்தளித்தார்.
அதே போல் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கொண்டாடுவதற்காகதமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் அதில் அவரது எதிரணியைச் சேர்ந்த தங்கபாலு, திண்டிவனம் ராமமூர்த்தி, எம்.பி.சுப்ரமணியம், முன்னாள்மத்திய அமைச்சர் அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
இதன் மூலம் தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் மீண்டும் துவங்கி விட்டது தெள்ளந் தெளிவாக தெரிகிறது.
இளங்கோவன் அளித்த விருந்தில் சுவையான ஆம்பூர் ஆட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட்டது. இந்த பிரியாணிசெங்குன்றம் திருமண மண்டபத்தில் சுவையாக தயார் செய்யப்பட்டது.
இது தவிர சைட் டிஷ்ஷாக கத்திரிக்காய் மசால், வெங்காய பச்சிடி, நெய் கேசரியும் பரிமாறப்பட்டது. சுவையானஅறுசுவை உணவை காங்கிரஸ் கட்சியினர் சாப்பிட்டு அகமகிழ்ந்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications