"ஆட்சி மாற்றத்தால் தொழில்துறைக்குப் பாதிப்பில்லை"
சென்னை:
தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றங்கள், தொழில்துறை வளர்ச்சியில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இந்தியத் தொழில்துறை சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சம்மேளனத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ். மகாலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த 2 மாநிலங்களிலும் தொழில்துறை வெகு வேகமாக வளர்ந்து வருவதால், ஆட்சி மாற்றத்தினால் பாதிப்புஎதுவும் ஏற்படாது. தவிர, இம்மாநிலங்களில் அதிக எழுத்தறிவு பெற்றவர்கள் இருப்பதாலும், சுயதொழில்செய்பவர்கள் அதிகம் இருப்பதாலும் தொழில்துறை வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கிறது.
தகவல் தொழில்நுட்பத் தொழில் சம்பந்தமான சர்வதேச மாநாடு ஒன்றை செப்டம்பர் மாதம் நடத்த நாங்கள்திட்டமிட்டுள்ளோம். உணவு உற்பத்தித் துறைகள் சம்பந்தமான மற்றொரு சர்வதேச மாநாட்டையும் டிசம்பர் மாதம்தமிழகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மகாலிங்கம்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications