13,000 மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம்
சென்னை:
திமுக ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் சாலைப் பணியாளர்கள் டிஸ்மிஸ்செய்யப்படவுள்ளனர்.
கிராமப்புறங்களில் சேவை செய்யும் நோக்கோடு கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சுமார் 13,000க்கும் மேற்பட்டமக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குத் தொகுப்பூதியமாக ரூ.200 வழங்கப்பட்டது.
கிராமப்புறங்களில் உள்ள பூங்காக்களை பராமரித்தல், குளம், கிணறுகளை பராமரிப்பது, தெருவிளக்குகள் சரியாகஎரியாவிட்டால் கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இவர்கள் செய்து வந்தனர். கடந்த 1990ஆம்ஆண்டு இவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
ஆனால் 1991ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது முதல் வேலையாக இவர்கள் அனைவரும் பதவியிலிருந்துதூக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல்வேலையாக மீண்டும் மக்கள் நலப் பணியாளர்கள் கொண்டு வரப்பட்டனர். இவர்களது தொகுப்பூதியம் ரூ.750ஆக அதிகரிக்கப்பட்டது.
இதேபோல, சாலைப் பணியாளர்கள் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு 3,000 பேர் வரை நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மக்கள் நலப் பணியாளர்கள் பதவிக்காலம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது.தற்போது மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் சாலைப் பணியாளர்கள் பதவியை ஒழிக்க அதிமுக அரசு முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான உத்தரவுகள் ஏற்கனவே மாவட்ட ஊரக வளர்ச்சித் துறைகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. விரைவில் இப்பதவிகள் ஒழிக்கப்படும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications