வீரப்பனை பிடிக்க மத்திய அரசு உதவும்: ஜெயலலிதா
டெல்லி:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படை போலீஸாருக்கு மத்தியஉள்துறை அமைச்சகம் உதவி செய்யும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் புதன்கிழமைதெரிவித்தார்.
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியைசந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராகஇருப்பதாக உள்துறை அமைச்சர் அத்வானி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுகூட்டு அதிரடிப்படை தமிழக பிரிவில் தேவாரமும், விஜயகுமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தலைமையின் கீழ் உள்ள போலீஸார் கர்நாடக அதிரடிப்படை தலைவர் கெம்பையாவுடன் இணைந்துவிரைவில் வீரப்பன் மறைந்திருக்கும் சத்தியமங்கலம் காட்டுக்குள் தேடுதல் வேட்டையை ஆரம்பிப்பார்கள்.இதற்கான அனைத்து முயற்சிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
பல கொலைகள், கடத்தல்கள் போன்ற குற்றங்களைச் செய்துள்ள வீரப்பனை கூட்டு அதிரடிப்படை போலீஸார்விரைவில் பிடித்தே தீருவார்கள். வீரப்பனைப் பிடிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஒப்புக்கொண்டுள்ள அத்வானிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களைப் புதுப்பிப்பதற்கும் அமைச்சர் அத்வானியிடம் உதவிகள் கேட்டுள்ளேன்என்றார். முன்னதாக டெல்லியில் ஜெயலலிதா திட்டக்கமிஷன் சேர்மன் கே.சி.பந்த்திடம் ஆலோசனை நடத்தினார்.
ஜெயலலிதாவை சந்தித்தபின் பந்த் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டிய பலதிட்டங்கள், அதற்குத் தேவையான நிதி குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறினார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications