பாண்டி .. சபாநாயகர் யார்?
சென்னை:
பாண்டிச்சேரி சபாநாயகராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும்அ.தி.மு.கவுக்கிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
பாண்டிச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சிஆட்சியமைத்துள்ளது. தற்போது முதல்வரையும் சேர்த்து 5 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இன்னும் ஒருஅமைச்சர் மட்டுமே பதவியேற்க விதி வழி வகுக்கிறது. அந்த அமைச்சர் பதவி காங்கிரஸ் அல்லது தமிழ் மாநிலகாங்கிரஸுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.
தற்போது இடைக்கால சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்சபாநாயகர் தேர்தலை நடத்தவுள்ளார். ஆனால் சபாநாயகர் தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளர் யார் என்பதில்காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் குழப்பம், போட்டியும் நிலவுகிறது.
சபாநாயகர் பதவியை அ.தி.மு.கவுக்குக் கொடுக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது சபாநாயகர்பதவிக்கு முன்னாள் முதல்வர் டி.ராமச்சந்திரன் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது. ஆனால்டி.ராமச்சந்திரனுக்கு எதிர்ப்பு நிலவுகிறது.
பாண்டிச்சேரியில் கட்சி மாறுவதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு லஞ்சம் கொடுத்ததாக முன்னாள்முதல்வர் வைத்தியலிங்கம் மற்றும் டி.ராமச்சந்திரன் மீது வழக்கு உள்ளது.
இந்த நிலையில், டி.ராமச்சந்திரன் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவது கூடாது என்று பாண்டிச்சேரி திராவிடபேரவை என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் நந்திவர்மன் கூறியுள்ளார்.
இதற்கிடையே சபாநாயகர் தேர்தலில் தங்கள் தரப்பில் வேட்பாளரை நிறுத்த தி.மு.க கூட்டணிக் கட்சிகள் முடிவுசெய்துள்ளன. தங்களது வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் பொருட்டு ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்என்று அக்கட்சிகள் கோரியுள்ளன.
ரகசிய ஓட்டெடுப்பு நடந்தால், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்துஓட்டுப் போடச் செய்யலாம் என அக்கட்சிகள் நினைக்கின்றன. தி.மு.க தரப்பில் தற்போது மொத்தம் 14 பேர்உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில் 16 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் பதவி இல்லாத எம்.எல்.ஏக்கள் என்று பார்த்தால் 11 பேர் வருகிறார்கள். இவர்கள் அனைவரும்எந்தப் பதவியும் தங்களுக்குக் கிடைக்காததால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ளார். அவருக்கு ஆதரவாகநீலகங்காதரன், கமலக்கண்ணன் ஆகியோர் உள்ளனர்.
அதேபோல, கட்சித் தலைவர் நாராயணசாமிக்கு முதல்வர் பதவி கிடைக்காததால், அவரது ஆதரவுஎம்.எல்.ஏக்களான அங்காளன், ஸ்ரீதரன், வல்சராஜ், நளமகராஜன் ஆகியோர் அதிருப்தியடைந்துள்ளனர்.
முன்னாள் எம்.பி. பாரூக்க்கின் மகன் ஷாஜகான் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில்உள்ளார். இப்படிப் பலவிதமான எதிர்ப்புகளின் மத்தியில் சபாநாயகர் தேர்தல் நடக்கவுள்ளதால், இந்தக்குழப்பத்தைப் பயன்படுத்தி தங்களது தரப்பு நபரை சபாநாயகராக்குவது என்ற ரகசியத் திட்டத்தை தி.மு.க கூட்டணிதீட்டி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications