இந்தியாவுக்கு "அவாக்ஸ்" ராடார் தருகிறது இஸ்ரேல்
ஜெருசலேம்:
விண்ணிலேயே செயல்படும் ராடார் சிஸ்டமான அவாக்ஸை இஸ்ரேலிடமிருந்து இந்தியா வாங்கவிருக்கிறது.
நீண்ட காலமாகவே இத்தகைய ஒரு ராடார் சிஸ்டத்தை வாங்க இந்தியா ஆர்வம் கொண்டிருக்கிறது.ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ள ஐ.எல்.-76 போர்விமானம் அல்லது ஒரு போயிங் விமானத்தில் இந்த அவாக்ஸைஇந்தியா பொருத்தவிருக்கிறது.
இஸ்ரேல் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் அனுமதி தந்தால் போதும். அவாக்ஸ் சிஸ்டம் இந்தியாவில்இறங்கிவிடும்.
இந்தியாவுக்கு இந்த ராடார் சிஸ்டத்தை விற்கப் போவதாகச் சென்ற ஆண்டே இஸ்ரேல் அமெரிக்காவிடம் அனுமதிகேட்டது. ஆனால் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் அரசிடம் இருந்து நீண்ட நாட்களாக எந்தப்பதிலும் வரவில்லை. கடந்த ஜனவரியில் புஷ் பதவி ஏற்பதற்கு சில நாட்களுக்கு முன்தான் இதற்கான அனுமதியைஇஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பியது.
இந்தியாவுக்கு அவாக்ஸை விற்பதற்கு சிறிது காலமாகவே அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.இதே காரணத்துக்காகத்தான் கடந்த வருடம் சீனாவிற்குக் கொடுக்கவிருந்த அவாக்ஸ் வியாபாரத்தை இஸ்ரேல் ரத்துசெய்துவிட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications