ஆளுனரை திரும்ப பெற கருணாநிதி மீண்டும் கோரிக்கை
சென்னை:
தமிழக ஆளுனர் பாத்திமா பீவியை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் எனமுன்னாள் முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஊழல் வழக்குளில்தண்டனை பெற்றிருந்ததால் ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
இந்நிலையில் அ.தி.மு.க.எம்.எல்.ஏக்கள் சட்டசபை தலைவராக ஜெயலலிதாவை ஒரு மனதாக தேர்ந்தெடுத்தார்கள்.இதையடுத்து ஜெயலலிதா தமிழக ஆளுனர் பாத்திமா பீவியை சந்தித்து அ.தி.மு.கவை ஆட்சியமைக்கஅழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆளுனரும் அ.தி.மு.கவை ஆட்சி அமைக்க அழைத்தார். முதல்வராக ஜெயலிலதாவுக்கு பதவி பிரமாணமும் செய்துவைத்தார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாதவருக்கு ஆளுனர்பதவிப்பிரமாணம் செய்து வைத்தது சட்டப்படி குற்றம் எனவும், எனவே ஆளுனரை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் எனவும் கருணாநிதி கோரியிருந்தார்.
ஆனால் இதை பிரதமர் வாஜ்பாய் நிராகரித்து விட்டார். இந்நிலையில் தமிழக ஆளுனரை திரும்பப் பெறுமாறுதொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர்கூறுகையில், தி.மு.கவின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் பின்பற்றப்படும்.
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற ஜனநாயக வழிமுறையில் செயல்படுவோம் என்பதை நான் ஏற்கனவேகூறியுள்ளேன்.
பாத்திமா பீவி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை திரும்ப அழைப்பது குறித்து பா.ஜ.க. மீண்டும்யோசனை செய்யுமா என கூறப்படுவது தவறான கருத்து. இது போன்ற தவறான கருத்துக்கள் கூறப்படுவதை நான்வன்மையாக கண்டிக்கிறேன்.
பாத்திமா பீவி சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதால் அவர் தமிழக ஆளுனராக வர வேண்டும் எனவிரும்பியவனே நான்தான்.
தீவிரவாத இயக்கங்களை தடை செய்ய வேண்டும்முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் வாஜ்பாயிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. ஆனால் அவர் தடை செய்யுமாறு கோரியுள்ள இரண்டு இயக்கங்கள்முன்னரே தடை செய்யப்பட்டுவிட்டன. மற்ற இரண்டு இயக்கங்களை தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு நான்கடிதம் எழுதியிருந்தேன்.
மத்திய அரசும் சில விளக்கங்கள் கேட்டு எனக்கு கடிதம் எழுதிதியிருந்தது. அந்த விவரங்களையும் நாங்கள்வழங்கி விட்டோம். தமிழக நலனுக்காக மத்திய அரசிடம் ஜெயலலிதா விடுக்கும் அனைத்து கோரிக்கைகளையும்தி.மு.க வரவேற்கும் என்றார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications