அரசியலில் தூய்மை இல்லை: சேஷன் கவலை
கோவை:
அரசியலில் அறம், தூய்மை, இரக்கம் அறவே இல்லாமல் போய் விட்டது என முன்னாள் தலைமைத் தேர்தல்கமிஷனர் டி.என் சேஷன் தெரிவித்தார்.
திருப்பூரில் காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர ஸ்ரீ தயானந்த சரஸ்வதியின் 108 வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.என் சேஷன் கூறியதாவது:
காஞ்சிப் பெரியவர் கடந்த 1907ம் ஆண்டு முதல் தனது பணியைத் தொடங்கி 94ம் ஆண்டு வரை 87 ஆண்டுகள்சிறப்பான சேவையை அளித்துள்ளார். மடாதிபதியாகத் திகழ்ந்த அவரது சேவைகள் அளவிடற்கரியது. அவர் சென்ற இடங்களில் எல்லம் தர்மத்தையும், அறத்தையும் வலியுறுத்தத் தவறியதில்லை. ஆன்மீகப் பாதையில்அவர் ஆற்றிய தொண்டு மக்கள் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் இருந்துள்ளது.
இந்தியத் திருநாட்டில் எத்தனையோ முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. எவ்வளவோ பிரச்னைகள் ஏற்பட்டுவருகின்றன. ஒரு புறம் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உணவு தானியம் ஒரு புறம் குவிந்து கிடக்கிறது.
மற்றொரு புறம் வறுமையில் வாடி வரும் உணவிற்கே வழி இல்லாத ஏழைகளும் வசித்து வருகின்றனர்.இந்தியாவில் பால் உற்பத்தி அமெரிக்காவை விட அதிமாக இருந்து வருகிறது. ஏழைக் குழந்தைகளுக்கு குறைந்தவிலையில் பால் கிடைப்பதில்லை.
இந்தியா, அறிவியலில் பெரும் சாதனைகளைச் செய்து வருகிறது. சிறு குழந்தைகள் கூட அறிவு மிக்கவர்களாகத்திகழ்கிறார்கள். ஆனால், அதே சமயம் அவர்களிடம் விவேகம் இல்லாமல் போய் விட்டது. விவேகம்மனிதர்களிடையே வளர்ச்சி பெறவில்லை.
காவல் துறை, அரசியல்வாதி, வியாபாரம் என எங்குமே நேர்மை இல்லை. தூய்மை இல்லை. பொது வாழ்வில்ஈடுபட்டுள்ள இவர்களிடம் தூய்மை, இரக்கம், அறம் என்பது அறவே இல்லாமல் போய் விட்டது. எங்கும்ஆட்சியில் சுத்தம் இல்லை. தர்மம் என்றால், தமிழில் அறம் என்று பொருள். பெற்றவர்களைப் பிள்ளைகள் காப்பதுதான் இப்போது அறம் என்றாகி விட்டது. பண வசதி இருந்தாலும், நம்மிடம் இப்போது நிம்மதியில்லை. நன்னெறிஇல்லை.
நான் ஜெயலலிதாவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 1993ம் ஆண்டு தான் சந்தித்தேன். அப்போது தேர்தல்கமிஷனராக இருந்தேன். அதற்குப் பின்னர் சந்திக்கவே இல்லை. ஆனால், என்னை மாநிலங்களவை உறுப்பினராக்கஅதிமுக முயலுவாதாகக் கூறுகின்றனர். இது தவறான தகவல் என்றார் சேஷன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications