தி.மு.க முன்னாள் எம்.பிக்கு போலீஸ் காவல்
சென்னை:
மிரட்டல் வழக்கில் கைது செய்யப்படுள்ள தி.மு.க. முன்னாள் எம்.பி., பரசுராமனை ஒரு நாள் போலீஸ் காவலில்வைக்குமாறு முதன்மை செஷன்ஸ் நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை கே.கே. நகரில் வசித்து வருபவர் தெய்வசிகாமணி. இவர் ரோடுபோடும் காண்ட்ராக்டராக பணிபுரிந்துவருகிறார். இவரிடம் கமிஷன் கேட்டு மிரட்டியதாக தி.மு.க முன்னாள் எம்.பி. பரசுராமன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கின் அடிப்படையில் பரசுராமன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தவழக்கு புதன்கிழமை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
பரசுராமனை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்தமனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், போலீஸ் காவலில் வைக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என பரசுராமனை கேட்டார்.
பரசுராமன், எனக்கு உடல்நிலை சரியில்லை. சர்க்கரை வியாதி உள்ளது, நான் இந்த வழக்கில் சம்பந்தப்படவில்லைஎன்றார்.
இதையடுத்து நீதிபதி பரசுராமனை1 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். பரசுராமன் சர்க்கரை நோயால்பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு சரியான நேரத்தில் உணவு கொடுக்கப்பட வேண்டும்.
அவரிடம் அதிக நேரம் விசாரணை செய்யக்கூடாது. விசாரணையின் போது பரசுராமன் தனது வக்கீல்களை உடன்வைத்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி பரசுராமனை விசாரணை செய்யும் போது அவரது வக்கீல்கள் ஆர்.எஸ் பாரதி மற்றும் கிரி ராஜன்ஆகியோர் உடனிருப்பார்கள்.
பின் வழக்கை இந்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி அசோக்குமார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications