தனிமைச் சிறையில் வாடிய குடும்பம்
டெல்லி:
தானும், தனது குடும்பத்தினரும் கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் குழந்தைகளுடன் நான்கு வருடமாகசிறிய அறையில் அடைபட்டுக் கிடந்த பெண்ணை டெல்லி போலீசார் மீட்டுளள்ளனர்.
சொத்து தகராறு காரணமாக தனது சகோதரர்களால் தானும் தனது மகன்களும் கொல்லப்பட்டு விடுவோம் எனஅச்சம் கொண்ட தாய் தன்து மகன்களுடன் ஒரு அறையில் கதவு, ஜன்னல்களை மூடி இருட்டறையில், காற்று,வெளிச்சம் எதுவும் இல்லாமல் சிறை வாழக்கை வாழ்ந்து வந்தார். அவரை டெல்லி போலீசார் புதன்கிழமைமீட்டனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், சுஷில் பஜாஜ் (வயது 50) என்ற பெண்ணின் கணவர் ராணுவ கான்ட்ராக்டராகஇருந்து வந்தார். அவர் 1991ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து போனார்.
அதன் பின் பஜாஜின் சகோதரர்கள் அவரது சொத்தை எடுத்துக் கொண்டு தொடர்ந்து அவரை மிரட்டி வந்தனர்.
இதனால் தானும் தனது மகன்களான தருண் (வயது 24), அமர் (வயது 23) பானு (வயது 19) ஆகியோரும் தனதுசகோதரர்களால் கொல்லப்பட்டு விடுவோம் என பயந்து 1996ம் ஆண்டு முதல் இரண்டு மாடிக்கட்டிடத்தில் உள்ளவீட்டிற்குள் சென்று கதவு, ஜன்னல்களை மூடிக் கொண்டு விளக்கு வெளிச்சம், காற்று இல்லாமல் சிறை வாழக்கைவாழ்ந்து வந்தார்.
அவரையும் அவரது குடும்பத்தாரையும் தைரியம் கூறி வெளியே வரவழைத்தோம். அப்போது அவர்கள்உடல்நிலையும், அவர்கள் வசித்து வந்த அறையின் நிலையும் 4 வருடங்களாக அவர்கள்எவ்வளவு கொடுமையானநிலையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை முற்றிலுமாக எடுத்துக் காட்டியது.
அவர்களுக்கு சொந்தமான கார் ஒன்றும் உபயோகப்படுத்தப்படாத காரணத்தால் ஓட முடியாத நிலையில்இருக்கிறது. அவர்கள் வசித்து வந்த அறையிலிருந்து கடுமையான நாற்றம் வந்தது. அது 4 ஆண்டு காலமாக அந்தஅறையில் காற்று புகவே வழி செய்யப்படவில்லை என்பதை காட்டியது என கூறினர்.
போலீஸ் துணை கமிஷனர் கேவால் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு பஜாஜ் தனிமையில் 4ஆண்டு காலமாக வாழ்ந்து வருவது தெரியாது, சில தினங்களுக்கு முன்பு பஜாஜ் போலீஸ் கமிஷனர் அஜய்ராஜ்ஷர்மாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் தானும், தனது மகன்களும் கொல்லப்பட்டால் அதற்கு அவர்தான் காரணம் என எழுதியிருந்தார். உடனேஅவரது வீட்டிற்கு போலீசார் அனுப்பப்பட்டனர்.
அவர்கள் இருப்பிடம் 10 நாட்களுக்கு முன்புதான் தெரிய வந்தது. அவர்கள் 12 அடிக்கு 12 அடி என்ற சிறியஅறையில் காற்று வெளிச்சம் இன்றி வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
போலீசார் கதவை தட்டிய போது, பஜாஜ், தனது சகோதரர்கள்தான், தங்களை கொல்ல ஆள் அனுப்பி விட்டார்கள்என சந்தேகப்பட்டு கதவை திறக்க மறுத்து விட்டார்.
அவர்களுக்கு ஒன்றும் நடக்காது என தைரியம் கூறி அவர்களை வெளியே வரவைத்தோம். அவர்களை வெளியேவரவைக்க 10 நாட்கள் கஷ்டப்பட்டோம். 10 நாட்கள் நாங்கள் தொடர்ந்து கொடுத்த தைரியத்திற்கு பிறகுதான்அவர்கள் வெளியே வந்தனர்.
அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது. அவர்களை குளிக்கச் சொல்லி குளிக்க வைத்தோம். புதிய பெட் ஷீட்டுகள்கொடுத்துள்ளோம். அவர்கள் தங்கியிருந்த அறையில் மின் விளக்குகள் பொருத்தியுள்ளோம். பல ஆண்டுகள்கழித்து இப்போதுதான் அவர்கள் சூரிய ஒளியையே கண்ணால் காண்கிறார்கள்.
அவர்கள் இன்னமும் பயத்தில் இருப்பதால் அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது.அவர்களுக்கு தக்க பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
பஜாஜ் போலீசாரிடம் கூறுகையில், எனது சகோதரர்கள் என்னை தொடர்ந்து மிரட்டி வந்த காரணத்தால் நாங்கள்பயந்து போய் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம்.
விளக்கு வெளிச்சம் இருந்தால் என் சகோதர்ரகள் எங்களை கண்டு பிடித்து கொன்று விடுவார்கள் என விளக்கேபயன்படுத்தவில்லை. இரவு இருட்டிய பின்பு யாரும் என்னை கண்காணிக்கவில்லை என உறுதிபடுத்திக் கொண்டபின் வெளியே சென்று பிரட் வாங்கி வருவேன். அதுதான் எங்கள் உணவு.
எனது மகன் அடிக்கடி வெளியே சென்றால். அவன் உயிருக்கும் ஆபத்துவரும் என்பதால் அவனது படிப்பையும்நிறுத்தி விட்டேன் என்றார்.
எந்த நடவடிக்கையும் எடுக்கும் முன் பஜாஜின் சகோதர்கள் விசாரிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications