காங்கிரசை கை கழுவும் ஜெயலலிதா
டெல்லி:
காங்கிரசைக் கை கழுவும் படலத்தை ஆரம்பித்து விட்டார் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமானஜெயலலிதா.
மரியாதை நிமித்தமாக பிரதமர், ஜனாதிபதி மற்றும் பல தலைவர்களைச் சந்திப்பதற்காக டெல்லி சென்ற ஜெயலலிதாஇதற்கான அடிக்கல்லை நாட்டி விட்டதாகச் சொல்லப்படுகிறது.
டெல்லிக்குப் போவதற்கு முன்பாகவே, ஏன் தேர்தலுக்கு முன்பாகவேகூட, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கானவாய்ப்புக்கள் பற்றி பல ஆரூடங்கள் எழுந்தன.
டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயை அவர் 30 நிமிடங்கள் அவர் சந்தித்துப் பேசி இருக்கிறார். மரியாதைநிமித்தமாகவும் தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மட்டுமே இந்தப்பேச்சுவார்த்தை நடந்தது என்று ஜெயலலிதா கூறினார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியைப் புதுப்பித்துக் கொள்வது பற்றி தான் பிரதமரிடம் எதுவும் பேசவில்லை என்றும்அவர் கூறினார்.
ஆனால் நெருப்பில்லாமல் புகையுமா? தமிழகக் கலாச்சாரத்திற்கே உரிய பாணியில் வாஜ்பாய்க்கு சால்வைபோர்த்திய ஜெயலலிதா, சமாதானத்திற்கு அறிகுறியாக வெள்ளை ரோஜாக்களையும் கொடுத்துள்ளார். இதுகூட்டணிக்கான அறிகுறிதான் என்று பல அரசியல் நோக்கர்களும் கருதுகின்றனர்.
பிரதமர் சந்திப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துள்ளார் ஜெயலலிதா. இதுவும்மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்புதான் என்று கூறப்பட்டாலும், நிருபர்களிடம் ஜெயலலிதா கூறிய ஒருவிஷயம்தான் பலருடைய புருவங்களையும் உயர்த்திவிட்டது.
சோனியாவைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த ஜெயலலிததா, நிருபர்களிடம் ஒரு குண்டைப் போட்டார்.யாருடனும் இப்போது அதிமுகவுக்குக் கூட்டணி இல்லை. தேர்தலுக்காகத் தான் காங்கிரசுடன் கூட்டணி வைத்தோம்.இப்போது கூட்டணி கிடையாது என்றார்.
ஆனால், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பற்றி தன் வாயைத் திறக்கவே மறுக்கிறார் ஜெயலலிதா. இதற்கானவாய்ப்புகளே கொஞ்சம்கூடக் கிடையாது என்று பா.ஜ.க. (முக்கியமாக தமிழக பா.ஜ.க.) கட்சியைச் சேர்ந்தவர்கள்கூறி வருகின்றனர்.
தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மக்கள் கூட்டணியில்தான் அ.தி.மு.க. இடம்பெறும் எனவும்தெரிவித்துள்ளார் ஜெயலலிதா. இதன்மூலம் காங்கிரசுடனான உறவுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார் ஜெயலலிதாஎன்பது புரிகிறது.
மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல்,மவுனமாக இருந்து கொண்டு மாநில அரசுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ள ஜெயலலிதா முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications