கோவையில் புதிய கலெக்டர் பதவியேற்பு
கோவை:
கோவை மாவட்ட கலெக்டராக செல்லமுத்துவும், எஸ்.பி.யாக சொக்கலிங்கமும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர் செல்லமுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
குடிநீர், பொது விநியோகம் ஆகிய இரு பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கவனிப்பேன். நான்ஏற்கனவே சமூகநலத் துறை இயக்குநராகப் பொறுப்பு வகித்துள்ளேன்.
எனவே, பொதுமக்களின் பிரச்னைகளை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளதால் சிறப்பானபணியாற்ற முடியும். கோவை நகரைப் பொறுத்தவரை, தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையைப் போக்கதொழிலதிபர்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றார்.
புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட எஸ்.பி. சொக்கலிங்கம் கூறுகையில், கோவை புறநகர் பகுதியில்நடக்கும் கொள்ளையைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். எத்தகைய புகார்கள்இருந்தாலும் பொதுமக்கள் என்னிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications