ஜிம்பாப்வே டெஸ்ட்: ஹர்பஜன் சிங் அபார ஆட்டம்

Subscribe to Oneindia Tamil

பொலாவாயோ (ஜிம்பாப்வே):

ஹர்பஜன் சிங்கின் அபார ஆட்டத்தால், முதல் இன்னிங்ஸில் இந்தியா ஜிம்பாப்வேயைவிட 145 ரன்கள் அதிகம்பெற்று முன்னணியில் உள்ளது.

இந்திய - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம்நாளான வெள்ளிக்கிழமையன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் தண்டுல்கரும் ஹர்பஜன் சிங்கும்மட்டுமே அரை செஞ்சுரியைக் கடந்தனர்.

83 ரன்களுடன் 2ஆம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது இந்திய அணி. தண்டுல்கரும் ஸ்ரீநாத்தும் தொடர்ந்துவிளையாடத் தொடங்கினர். ஆனால் ஸ்ரீநாத் 1 ரன் எடுத்த நிலையில் வந்த வேகத்திலேயே பெவிலியன்திரும்பினார்.

இவரையடுத்து அணித்தலைவர் கங்குலி களமிறங்கினார். கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக விளையாடத அவர்,இந்த ஆட்டத்திலும் ஏமாற்றி விட்டார். 20 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது, ஸ்டிரீக்வீசிய பந்தில் ஆன்டி பிளாவரிடம் காட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 98.

இதையடுத்து ராகுல் டிராவிட், தண்டுல்கருடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி,அணியின் எண்ணிக்கையை 178ஆக உயர்த்தியபோது, தண்டுல்கர் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார்.

ஜிம்பாப்வே அணியினர் ஃபீல்டிங் செய்வதில் வல்லவர்கள். தண்டுல்கர் எப்போது தவறு செய்வார் என ஆவலுடன்காத்திருந்தனர். பிளிக்நாட் வீசிய பந்தை கார்லிசை நோக்கி அடித்தார் தண்டுல்கர். அதற்காகவே காத்திருந்த அவர்லபக் என பந்தை பிடித்துக் கொண்டார். 128 பந்துகளை சந்தித் தண்டுல்கர் 74 ரன்கள் எடுத்தார். இதில் 12பவுண்டரிகளும் அடங்கும். சச்சின் ஆட்டமிழந்த போது அணியின் எண்ணிக்கை 198.

டிராவிடுடன் ஜோடி சேர்ந்து ஆட வந்தார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சமீர் தீகே. இந்த ஜோடி நீண்ட நேரம்நீடிக்கவில்லை. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ராகுல் டிராவிட் பிளிக்நாட் வீசிய பந்தில் ஆன்டிபிளவிரிடம்காட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

டிராவிட் 67 பந்துகளை சந்தித்து 44 ரன்கள் எடுத்தார்.இதையடுத்து களமிறங்கியவர், இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். தீகே, ஹர்பஜன் இருவரும் சிறப்பாக ஆடினர் இருவரும் சேர்ந்து 72 ரன்கள் சேர்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+