இன்றைய தமிழனுக்கு அறிவு, தெளிவு இல்லை: கருணாநிதி
சென்னை:
இன்றைய தமிழன் எங்கிருந்தோ வந்ததை நேசிக்கிறான். காலில் விழுகிறான். கன்னத்தில் போட்டுக் கொள்கிறான்.ஆனால், இங்கே இருப்போரை அலட்சியப்படுத்தி விடுகிறான். தமிழகத்தில் தமிழன் சின்னாபின்னமாகி விட்டான்என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் வியாழக்கிழமை நடந்த திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் அவர் பேசியதாவது:
சங்க காலத்தில்கூட புரோகிதர், இடைத்தரகர் இல்லாமல் இதுபோன்ற திருமணங்கள் நடந்துள்ளன. அன்றையதமிழன் அறிவு தெளிவு உள்ளவனாக இருந்தான். பல்லாண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் அறிவு,தெளிவுள்ளவர்களாக இருந்தார்கள். நான் இன்றைய தமிழனைச் சொல்லவில்லை.
சங்ககாலத் தமிழனுக்கு நல்லது, கெட்டது என்பதெல்லாம் தெரிந்திருந்தது. ஆனால் இன்றைய தமிழன் இரவலைஅதிகம் நேசிக்கிறான். எங்கிருந்தோ வந்ததை நேசிக்கிறான். காலில் விழுகிறான். கன்னத்தில் போட்டுக்கொள்கிறான். ஆனால், இங்கே இருப்போரை அலட்சியப்படுத்தி விடுகிறான்.
பெரியார், அண்ணா கருத்துக்கள் நிரம்பிய தமிழகத்தில் தமிழகத்தில் தமிழன் சின்னாபின்னமாகி இருக்கிறான்.அந்தத் தமிழனை ஒன்றுபடுத்தும் பணிக்கு இந்த திருமணம் உதவி இருக்கிறது.
ஒரு வெள்ளைக்காரன் இத்திருமணத்திற்கு வந்து, இங்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கேட்டால்,ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பிரித்துச் சொல்ல முடியாது. பல்வேறு இனத்தவரும் இங்கே கூடி இருக்கலாம்.ஆனால், தமிழினமாக இந்த இனம் எப்போது வாழும் என்பதுதான் என் கவலை. அந்தக் கவலையை இந்தக் காலஇளைஞர்கள் போக்க வேண்டும் என்று பேசினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications