வீரப்பனை பற்றி துப்புக்கொடுத்தால் ரூ 25 லட்சம்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்து தகவல்கள் கொடுப்போருக்கு ரூ 25 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றுதமிழக அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை முதல்வர் ஜெயலலிதா வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுஅதிரடிப்படை போலீஸார் உள்பட உயர்மட்டக் குழு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
பல ஆண்டுகளாக தமிழக மற்றும் கர்நாடக அரசுக்கு பெரும் சவாலாக இருக்கிறார் வீரப்பன். வீரப்பனையும்,அவரது கூட்டாளி சேத்துக்குளி கோவிந்தனையும் பற்றி துப்புக் கொடுப்போருக்கு ரூ 20 முதல் ரூ 25 லட்சம் வரைகொடுக்கப்படும்.
வீரப்பனின் கூட்டாளிகளை குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ 10 லட்சம் கொடுக்கப்படும்.
வீரப்பனை உடனடியாகப் பிடிக்கும் வகையில் கூட்டு அதிரடிப்படை போலீஸார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்தஅதிரடிப்படையின் தலைவராக தமிழகம் சார்பில் தேவாரமும், கர்நாடகம் சார்பில் கெம்பையாவும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டு அதிரடிப்படையில் உள்ள போலீஸாருக்குத் தேவையான வாகனங்கள், ஆயுதங்கள், உணவுப்பொருட்கள்,குடிநீர் போன்ற அனைத்து வசதிகளையும் இரு மாநில அரசுகளும் செய்து கொடுக்கும்.
வீரப்பன் மறைந்திருக்கும் சத்யமங்கலம் காட்டுப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள்வீரப்பனைப் பற்றி துப்புக் கொடுத்தால் அவர்களுக்கு அரசு சிறப்பு சலுகைகள் அளிக்கும்.
வனத்துறை அதிகாரிகளும் கூட்டு அதிரடிப்படை போலீஸாருக்கு வீரப்பன் விஷயத்தில் அனைத்து உதவிகளையும்செய்து கொடுப்பார்கள்.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தர்மபுரி, ஈரோடு, சேலம் உள்பட 22 போலீஸ் நிலையங்களை அதிரடிப்படையின்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு முயற்சித்து வருகிறது. மேலும் ஜூன் 21 ம் தேதிக்குள்அதிரடிப்படையை மாற்றியமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டு அதிரடிப்படை தமிழக பிரிவு தலைவராக தேவாரம் இருப்பார். அவருக்கு துணையாக விஜயகுமார்நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications