எய்ட்ஸ் நோயாளியின் பிணத்தைப் புறக்கணித்த டாக்டர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தாம்பரத்தில் உள்ள டி.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எய்ட்ஸ் நோயாளி தற்கொலைசெய்து கொண்டார். அவரது உடலை டாக்டர்கள் போஸ்ட் மார்ட்டம் செய்ய மறுத்து விட்டனர்.

நாகப்பட்டனம் மாவட்டம் ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி (30). லாரி டிரைவராக இருந்துவந்தார். லாரி டிரைவராக பணிபுரிய உடல் நிலை இடம் கொடுக்காததால் தனது ஊரிலேயே டெய்லராக இருந்துவந்தார்.

இந்த நிலையில் ஜோதிமணிக்கு பலவித உடல் உபாதைகள் ஏற்பட்டன. உடலும் மெலியத் தொடங்கியது.இதையடுத்து அவர் தாம்பரம் காசநோய் (டி.பி.) மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

கடந்த மாதம் 5-ம் தேதி ஜோதிமணி தாம்பரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்துபார்த்ததில் ஜோதிமணிக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள்மருந்துகள் கொடுத்தனர்.

இந்த நிலையில் தனக்கு எய்ட்ஸ் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஜோதிமணி வெள்ளிக்கிழமை காலைமருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் ஜோதிமணியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டைஅரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் எய்ஸ்ட் நோயாளியின் உடல் என்று அறிந்ததும்அங்கிருந்த டாக்டர்கள் பிரேதப் பரிசோதனை செய்யமுடியாது என்று மறுத்து விட்டனர். அதிர்ச்சியடைந்தபோலீஸார் உடனடியாக உடலை அரசுப் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் இதே பதில்தான்கிடைத்தது.

வேறு வழியின்றி கடைசி முயற்சியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்தசில நல்ல மனம் படைத்த டாக்டர்கள் ஜோதிமணியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து போலீஸாரிடம்ஒப்படைத்தனர். அவர்கள் ஜோதிமணியின் தாயாரிடம் உடலைக் கொடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+