காவிரி பிரச்சனை: ஜெ. தலைமையில் ஆலோசனை
சென்னை:
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் காவிரிபிரச்சனை உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், சில உயர் அதிாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி எந்தவிதமான தகவலும் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை,
இந்தக் கூட்டம் மாலை 3 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிவரை ஒன்றரை மணிநேரம் நடந்தது. இந்தக்கூட்டத்தில், மழை பெய்தால் மட்டுமே காவிரி நீர் திறப்பு என கர்நாடக அரசு கூறியுள்ளது குறித்துவிவாதிக்கப்பட்டது.
இது குறித்து கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா அல்லது மத்திய அரசுடன் பேச்சுவார்ததைநடத்தலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இது தவிர உள்ளாட்சி அமைப்புகளை அடுக்காக மாற்ற மத்திய அரசை வலியுறுத்துவது, சாலைப் பணியாளர்களைமுழுவதுமாக நீக்கினால் சட்டப்பிரச்சனை ஏதும்வருமா, மதுக்கடையை ஏலம் விடும்முறையை மாற்றி அமைப்பது,அரிசி கையிருப்பின் தரம், குடிநீர் பிரச்சனையை சமாளிப்பது உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications