தமிழக அமைச்சரவையில் 3 பேர் மாற்றம்
சென்னை:
பதவியேற்ற 22 நாட்களிலேயே தன் அமைச்சரவையில் 3 பேரை நீக்கிவிட்டு, 3 புதிய அமைச்சர்களைநியமித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன.
சனிக்கிழமை மாலை தமிழக ஆளுநர் மாளிகைக்குத் திடீரென்று சென்ற ஜெயலலிதா, இந்த அதிரடி மாற்றங்களைஆளுநரிடம் தெரிவித்தார்.
இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த அய்யாறு வாண்டையார், தொழில்துறை அமைச்சராக இருந்த வி.ஜெயராமன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் ஆர். விஸ்வநாதன் ஆகியோர்தான் நீக்கப்பட்ட 3அமைச்சர்கள்.
இவர்களுக்குப் பதிலாக நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. ஜீவானந்தம், உடுமலைப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.சி. சண்முகவேலு மற்றும் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் ஆகிய 3 பேரும் புதிய அமைச்சர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண்மைத்துறை ஜீவானந்தத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித்துறையைக் கவனித்துக் கொள்கிறார் சி. சண்முகவேலு. வைத்திலிங்கத்துக்குத் தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருக்கும் சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன.
வேளாண்மைத்துறையைக் கவனித்துக் கொண்டிருந்த பி.சி. ராமசாமி, இந்து அறநிலையத்துறை அமைச்சராகிறார்.கூட்டுறவுத்துறை அமைச்சர் பி. தனபாலுக்கு உணவு, நுகர்வோர் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைகளும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் அமைச்சர் சரோஜா. இவர் முன்பு பிற்படுத்தப் பட்டோர் நலன், பால்வளம்,பால் பண்ணை வளர்ச்சி ஆகியவற்றைக் கவனித்து வந்தார்.
சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த ஆலங்குடி வெங்கடாசலம், தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையைக்கவனிக்கப் போகிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications