போதைப்பொருளின் கடல் கடந்த பாதை
டெல்லி:
இந்தியாவிலிருந்து நாள்தோறும் ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தப்படுவது குறித்து இந்தியபோதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கர்நாடக, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில்தான் போதைப்பொருள் கடத்தல் அதிக அளவில் நடப்பதாகக்கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தின் தலைநகரம் பெங்களூர் என்றால்,தூத்துக்குடிதான் இதன் துறைமுகம். அந்த அளவுக்கு இந்த 2 நகரங்களிலும் போதைப்பொருள் கடத்தல் தொழில்தூள் பறக்கிறது.
பெரும்பாலும் இலங்கைக்குதான் ஏராளமான அளவில் ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள்கடத்தப்படுகின்றன. இது நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா-இலங்கைக்கு இடையே1998ஆம் ஆண்டு 38 கிலோ போதைப்பொருள்தான் கடத்தப்பட்டது. இதுவே 1999ஆம் ஆண்டு 224 கிலோவாகஅதிகரித்தது.
இலங்கை போதாது என்று, நைஜீரியாவிற்கும் ஏகப்பட்ட போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில்இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களை வைத்திருந்ததாக நைஜீரியர்களை டெல்லிபோலீஸார் கைது செய்தனர்.
வேற்றுமை பாராமல் நேபாளம், மியான்மர், கானா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கெல்லாம்போதைப்பொருள் கடத்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
2001ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 3,924 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும், 15,000 பேர்போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இவர்களில்92 பேர் வெளிநாட்டினராம். அதிலும் நைஜீரியாவினர்தான் அதிகமாம்!
எத்தனை பேரைக் கைது செய்தாலும், எத்தனை கிலோ போதைப்பொருள் கைப்பற்றப் பட்டாலும், இந்தபோதைப்பொருள் கடத்தலைத் தடுக்க முடியாமல் இந்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் முழி முழியென்றுமுழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications