காய்கறி மூட்டைக்குள் எரிசாராயம்: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
முட்டைக் கோஸ் காய்கறி மூட்டைகளுக்குள் ரூ.12 லட்சம் மதிப்புள்ள எரிசாராய பேரல்களைக் கேரளாவிற்குக்குகடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலத்திலிருந்து கோவைக்கு ஒரு லாரி வந்தது. முட்டைகோஸ் காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்த அந்த லாரிகாவல் துறையினரின் சைகையைப் பொருட்படுத்தாமல் சென்றது. இதையடுத்து அந்த லாரியை விரட்டிச் சென்றுமடக்கிப் பிடித்து காவல் துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது லாரியில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 29 பேரல்களில் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக லாரி ஓட்டுநர்கள் மொய்தீன் (34), உசேன் (55) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications