லண்டன் ஹோட்டல் வழக்கு: செப்டம்பர் 12ல் ஆஜராக ஜெ.க்கு கோர்ட் சம்மன்
சென்னை:
லண்டனில் ஹோட்டல் வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில் முதல் குற்றவாளியாகக் கருதப்படும் தமிழக முதல்வர்ஜெயலலிதா செப்டம்பர் 12ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சென்னை செசன்ஸ் கோர்ட்செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இவ்வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவும், 2வது குற்றவாளியான அதிமுக எம்.பி. தினகரனும் ஜூன்12ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே கோர்ட் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால்இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை கோர்ட்டுக்கு வரவில்லை.
இவ்வழக்கின் மீதான விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணையை முடிப்பதற்கு இன்னும்1 ஆண்டு கால அவகாசம் வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிபதியிடம்வேண்டினார்.
ஆனால், 1 ஆண்டு என்பது மிக நீண்ட காலம், விசாரணையை முடிப்பதற்கு 3 மாத கால அவகாசம் மட்டுமே தரமுடியும் என்று கூறினார் வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமார்.
மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா, தினகரன் ஆகிய 2 பேரும் செப்டம்பர் 12ஆம் தேதி கோர்ட்டில்ஆஜராக வேண்டும் என்று கூறி அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
லண்டனில் உள்ள 2 ஹோட்டல்களை ரூ.121.53 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கடந்த 1998ஆம் ஆண்டு லஞ்சஒழிப்புத் துறையினர் ஜெயலலிதா மீதும் தினகரன் மீதும் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications