ஆற்காடு வீராசாமி தம்பிக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை:
மிரட்டல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தி.மு.க. அமைச்சர்ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜனை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த இரும்பு கான்ட்ராக்டரை மிரட்டியதற்காக தேவராஜன் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேவராஜன் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தேவராஜன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் இன்னமும் விசாரணை முடியவடையவில்லை. மேலும குற்றம் சாட்டப்பட்டவருக்கு தேவையானமருத்துவ வசதிகள் செய்து கொடுக்கபட்டுள்ளன. எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கூடாது என அரசுதரப்பு வக்கீல் கோமதிநாயகம் வாதிட்டார்.
தேவராஜனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த வழக்கு அரசியல் பின்னணியுடன் போடப்பட்டவழக்கு. எனவே தேவராஜனை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என தேவராஜன் தரப்பில் ஆஜரான வக்கீல்சண்முகசுந்தரம் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மலை சுப்ரமணியம் தேவராஜனை ரூ.5,000 சொந்த ஜாமீனிலும், அதேதொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும் தேவராஜன் கேட்டுக் கொண்டபடி அவர் 10 நாட்கள் ஹைதராபாத்திலேயே தங்கியிருக்க வேண்டுமஎனவும் உத்தரவு பிறப்பித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications