கிருஷ்ணகிரியில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் காயம்
தர்மபுரி:
கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடந்த பயங்கரக் கலவரத்தில் 4 போலீஸார் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.இதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் குண்டுக் காயம் அடைந்தனர்.
கிட்டாம்பட்டியைச் சேர்ந்த பா.ம.க. தலைவர் அர்ச்சுணன் (32) நகை அடகு வைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகிருஷ்ணகிரிக்கு வந்தார். அப்போது அவரை மேல் தெருவைச் சேர்ந்தவர்கள் தடியால் அடித்து நகையைப் பறித்துசென்றனர். இது குறித்து போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக மேல்பேட்டையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 6பேரையும் விடுதலை செய்ய ஒரு பிரிவினர் கோரினர். இதற்கிடையே இவர்களை விடுதலை செய்யக் கூடாதுஎனக் கூறி கிருஷ்ணகிரியில் உள்ள சென்னை ரோட்டில் ஒரு தரப்பினர் சாலைமறியல் செய்தனர். இனால் பதட்டம்ஏற்பட்டது.
அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அதிகாரிகளின்பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது.
மீண்டும் திங்கள்கிழமை காலை கிட்டாம்பட்டியைச் சேர்ந்த கிராமத்தினர் 2 ஆயிரம் பேர் மேலத் தெருவைச்சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக கும்பலாக கத்தி அரிவாளுடன் வந்தனர். கிருஷ்ணகிரி நகராட்சிஅலுவலகம் அருகே வந்த அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால், போலீசாரை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைவீசினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 4 போலீஸார் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து நிலைமைக் கட்டுக்கடங்காமல் போகவே, பிளாஸ்டிக் குண்டுகளை நிரப்பி போலீசார் துப்பாக்கிச் சூடுநடத்தினர். இதில் 4 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் உடனடியாக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 2பேர் நிலைமை மிகவும் கவலைக் கிடமாக உள்ளது. இவர்கள் தீவிர சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
கலவரத்தை ஒடுக்க போலீசார் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தற்போது அங்கு அமைதிஏற்பட்டுள்ளது என எஸ்.பி மஞ்சுநாதா தெரிவித்துள்ளார்.
போலீசார் கிருஷ்ணகிரி நகர் முழுவதும் தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications