லட்சுகணக்கில் நர்சுகளை அழைக்கிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
அமெரிக்காவில் விரைவில் லட்சக்கணக்கான நர்சுகள் வேலைக்கு அமர்த்தப்பட உள்ளனர்.
அங்குள்ள நர்சுகளுக்கு 45 வயதிலேயே ரிடையர்மென்ட் கொடுத்து அனுப்பி விடுவதால், லட்சக்கணக்கான நர்சுவேலைகள் காலியாகின்றன. இங்குள்ள 5000 மருத்துவமனைகளில் கணக்கெடுத்ததில் 715 மருத்துவமனைகளில்1,26,000 நர்சுகள் காலியக உள்ளன.
இதனால் தற்போது ப்ரீலேன்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள 3,000 நர்சுகளுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.3,200சம்பளமாக அளிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்துக்கு இந்த நிதிச்சுமையைத் தாங்க முடியவில்லை போலும்.
வெளிநாட்டினரை நர்சு வேலைக்கு நியமித்தால்தான் சரிப்படும் என்று நினைத்த அமெரிக்க மருத்துவமனைகள்,தங்கள் நர்சு "வேட்டை"யை முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆரம்பித்தன. பிலிப்பைன்ஸ் நாட்டு நர்சு படிப்புக்கும்அமெரிக்க நாட்டு நர்சு படிப்புக்கும் அவ்வளவு ஒரு ஒற்றுமையாம்! அதனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் படிப்பைமுடித்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்த நர்சுகளை அப்படியே கொத்திக் கொண்டு வந்தன அமெரிக்கமருத்துவமனைகள்!!
இதேபோலவே இங்கிலாந்திலும் சில வேலைவாய்ப்புக் கண்காட்சிகளை நடத்தி நர்சுகளை "இறக்குமதி" செய்தனர்.அப்படியும் இப்படியுமாக சுமார் 700 நர்சுகள்தான் தேறினர். அதனால்தான் தற்போது தடாலடியாக இப்படி ஒருஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது நியமிக்கப்படவிருக்கும் நர்சுகளுக்கு 1 மணி நேரத்துக்கு 25 டாலர்கள், அதாவது ரூ.1,150 சம்பளமாகவழங்கப்படுமாம். இதனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளிலிருந்து நர்சுகள் வந்து குவிந்து விடுவார்கள்என்ற நம்பிக்கையோடு, நர்சுகளை வரவேற்க வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றன அமெரிக்கமருத்துவமனைகள்!
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications