"இந்திய-பாக் பேச்சுவார்த்தை பலனளிக்கும்"
சென்னை:இந்தியா -பாகிஸ்தானிடையேயான பேச்சுவார்த்தை நல்ல முடிவை கொடுக்கும் என இந்தியாவின் தலைமைராணுவ அதிகாரி பத்மநாபா தெரிவித்துள்ளார். சென்னையில் ராணுவ ஊழியர்களுக்கான குடியிருப்பு பகுதியை துவக்கி வைத்த பத்மநாபா, செய்தியாளர்களிடம்பேசியபோது:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப்பை பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்திய பிரதமர் வாஜ்பாய் அழைத்ததுவரவேற்கத் தக்கது. இருவருக்கும் இடையே அடுத்தமாதம் டெல்லியில் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது.அப்போது காஷ்மீர் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பல பிரச்சனைகள் குறித்து இருவரும்பேசுவார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. உடனடியாக நல்ல முடிவுஏற்படாவிட்டாலும் நாளடைவில் நல்ல முடிவு ஏற்படும்.
பேச்சுவார்த்தை குறித்து முன்கூட்டியே வேறு எதுவும் நான் கூற விரும்பவில்லை. ஆனால் பிரதமர் நல்ல முடிவைஎடுத்துள்ளார் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் எனஇந்திய மக்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன்.
பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன்பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கும் இந்நிலையில், எல்லைப் பகுதியில் பாகிஸ்தான்படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனாலும் நாம் தொடர்ந்து அமைதியை கடைபிடிப்போம்.
நாட்டின் பாதுகாப்புக்கு உதவும் ராணுவத்தினருக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அப்போதுதான்நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த முடியும். பட்ஜெட்டில் ராணுவத்திற்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படுகிறதுபோதுமான தேவையை பூர்த்தி செய்யுமளவுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றார் பத்மநாபா.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications