1330 குறளையும் ஒப்புவித்த சிறுமிக்கு ஜெ. பரிசு மழை
சென்னை:
1330 திருக்குறளையும் ஒப்புவித்து சாதனை படைத்த 11 வயது சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் பணப்பரிசும், வீடும்வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சிறுமியின் படிப்புச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
இதற்கான உத்தரவைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை பிறப்பித்தார்.
கடலூர் மாவட்டம், வீகமுடையநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவராஜி என்ற 11 வயது சிறுமி. இவர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். இவர் சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு ஒன்றுஅனுப்பியிருந்தார்.
அந்த மனுவில் தனது பள்ளியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் தான் முதலிடம் பெற்றிருப்பதாகவும்,திருக்குறள் ஒப்புவிப்பதில் பரிசு பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தன் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால் தனது படிப்பிற்கு உதவ வேண்டும், தங்களுக்கு வீடுதரவேண்டும், ஏழ்மை காரணமாக திருமணமாகாமல் இருக்கும் தனது மூத்த சகோதரியின் திருமணத்திற்கு உதவவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து திருக்குறள் அனைத்தையும் இந்த சிறு வயதிலேயே மனப்பாடம் செய்து ஒப்புவித்து சாதனைபுரிந்ததைப் பாராட்டி அந்த சிறுமிக்கு ரூ.5,000 பரிசு வழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
மேலும் அந்த சிறுமி கேட்டுக் கொண்டபடி அவருக்கு அரசு சார்பில் வீடு ஒன்றை வழங்க ஏற்பாடு செய்யுமாறுகடலூர் மாவட்ட ஆட்சி தலைவருக்கு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். அச்சிறுமியின் கல்விச் செலவை அரசேஏற்றுக் கொள்ளும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
சிறுமி சிவராஜியின் 21 வயது சகோதரிக்கு உதவுவதற்கு அரசின்வசம் எந்தத் திட்டமும் இல்லாத காரணத்தால்அவருக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பாக ரூ 10,000 வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications