முஸ்லிம் கைதிகள் கொடுமை: கருணாநிதி மீது வழக்கு
சென்னை:
தமிழகத்தின் பல சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் கைதிகளை கொடுமைப்படுத்தியது தொடர்பாகமுன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் உள்துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், முன்னாள் டி.ஜி.பி. சர்மாஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்ப்டடுள்ள முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். இது குறித்து விசாரணை நடத்தஉத்தரவிட வேண்டும என ப்ரீத்தி பாஸ்கர் என்பவர் சென்னை 7வது மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
அவர் தனது மனுவில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் நடந்த தொடர் குண்டுவழக்குச் சம்பவத்தில் 60 பேர்கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும்,தமிழகம் முழுவதிலுமுள்ள பல இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாகவும் 300க்கும் அதிகமானமுஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முஸ்லிம் கைதிகள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர், சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்கவும், முரசொலி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி பெறவேண்டும் என்ற எண்ணத்திலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே நாளில் 300 முஸ்லிம் சிறைக்கைதிகளைப்போலீசார் தாக்கினர்.
அவர்கள் கொடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். 110 நாட்களுக்கும் மேலாக அவர்களுக்கு சரியான உணவுபோடாமல் பட்டினி போட்டனர். போர்வை கொடுக்காமல் குளிரில் நடுங்கவிட்டனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் உள்துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், முன்னாள் டி.ஜி.பி. சர்மா,சிறைத்துறை ஐ.ஜி. ஆகியோர் கூட்டாக சேர்ந்து, சதி செய்துதான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இது பற்றிவிசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என தன் மனுவில் ப்ரீத்தி பாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை 7வது பெருநரக மாஜிஸ்திரேட், முஸ்லிம் கைதிகள்கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து கருணாநிதி, சாந்தா ஷீலா நாயர், சர்மாஆகியோரிடம் விசாரணை நடத்தி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்குள் அறிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.
இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சென்னை கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ்நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை மேற்பார்வையாளராக சென்னை மாநகர போலீஸ் இணை கமிஷனர் ஜாபர் சேட்நியமிக்கப்பட்டுள்ளார்.
மாஜிஸ்திரேட் உத்தரவின் அடிப்படையில், இந்த மூவர் மீதும் சென்னை கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால்கருணாநிதி மீதும் மற்ற அதிகாரிள் மீதும் விரைவில் விசாரணை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாநிதி மற்றும் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி மனு தாக்கல் செய்துள்ள ப்ரீத்தி பாஸ்கர் சென்னைஅ.தி.மு.க.வின் 117வது வார்டு செயலாளராக உள்ளார்.
போலி டாக்குமென்டுகள் தயாரித்தது, சென்னை அரசு பொதுத் தேர்வு இயக்குநரகத்தில் போலி சான்றிதழ்களைஉலவி விட்டது போன்ற வழக்குகளில் இவர் கைது செய்யப்பட்டவர்.
பிரபல பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரியின் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டதாக இவர் மீது வழக்குநீதிமன்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்க்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications