வரதட்சணை கொடுமை: மாமானார், மாமியார் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை அருகே ரூ.3 லட்சம் வரதட்சணை கேட்டு பட்டதாரிப் பெண்ணை மிரட்டிய மாமனார், மாமியார் கைதுசெய்யப்பட்டார். கணவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை அருகே தொட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (35). பி.ஏ. பட்டதாரி. இவருக்கும் பெங்களூரைச்சேர்ந்த லோகநாதனின் மகள் புவனேஸ்வரிக்கும் கடந்த 1998ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களதுதிருமணத்தின்போது 25 பவுன் தங்க நகை உட்பட பல பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுரேஷ்பாபு, வேலையை விட்டு விலகினார். கம்ப்யூட்டர்சென்டர் துவங்க வேண்டும் எனக் கூறி ரூ.3 லட்சம் கேட்டு மனைவியை துன்புறுத்தினார். அவரது குடும்பத்தினரும்துன்புறுத்தினர். இது குறித்து புவனேஸ்வரி போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் அவரது மாமனார் ஞானவேல் (60), சீதாலட்சுமி (53), சுரேஷ்பாபுவின் தம்பி ஸ்ரீதரன் (25)ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சுரேஷ்பாபுவைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+