சுதாகரன் கைது ஏன்?
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், மீண்டும் முதல்வருடன் சேரமுயற்சிப்பதாக வெளியாகும் செய்திகளைப் பொய்யாக்குவதற்காகவே அவரது கைது படலம் நடந்தேறியுள்ளதுஎன்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராக இருக்கும்போது, அவரால் தத்து எடுக்கப்பட்டவர் சுதாகரன். தோழிசசிகலாவின் அக்காள் மகனான சுதாகரனுக்கும், நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தி சத்தியாவுக்கும் பிரமாண்டமானஅளவில் திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா.
சுதாகரன் திருமணம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்கு பெரிதாக பேசப்பட்டது. அதுமட்டுமல்லாது,அத்திருமணமே ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கும் அடிகோலியது. இத்தனை "சிறப்புகள்" அடங்கிய சுதாகரன்,ஜெயலலிதா ஆட்சியிலிருந்து இறங்கியவுடன் "வளர்ப்பு மகன்" என்ற "பொறுப்பி"லிருந்து கழற்றி விடப்பட்டார்.அது முதல் சுதாகரனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.
ஜெயலலிதாவிடமிருந்து பிரிந்து வந்தவுடன் ரசிகர் மன்றத்தை சுதாகரன் தொடங்கினார். சின்ன எம்.ஜி.ஆர். என்றுஅவரது ஆதரவாளர்கள் அவரை அழைத்தனர். தமிழ்நாடெங்கும் ஆன்மீக பாதயாத்திரை நடத்திஅமர்க்களப்படுத்தினார் சுதாகரன். ஜெயலலிதா மீது பல புகார்களையும் கூறி வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இதையடுத்து மீண்டும் ஜெயலலிதாவுடன் சேருவதற்காகசுதாகரன் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக சசிகலா மூலம் முயற்சிப்பதாகவும் செய்திகள்கசிந்தன.
இந்தச் சூழ்நிலையில் தனது ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி கோபுஸ்ரீதரன் என்பவரைத் தாக்கியதாகவும், டிரைவர்பழனி, முத்துராமலிங்கம் ஆகியோரையும் தாக்கியதாகவும், கோபுவைத் துப்பாக்கியைக் காட்டி கொலை செய்யமுயற்சித்ததாகவும் கூறி சென்னை போலீஸார் சுதாகரனைக் கைது செய்தனர்.
ரசிகர் மன்ற பண விவாகரம் தொடர்பாக சுதாகரனுக்கும், கோபுவுக்கும் இடையே கருத்து வேறுபாடுஇருந்ததாகவும், இதையடுத்தே இந்த மோதல் ஏற்பட்டதாகவும் போலீஸார் கூறியுள்ளனர். அவரிடமிருந்துஹெராயின் போதைப் பொருளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். தற்போது சுதாகரன் சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுதாகரன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயலலிதாவுடன் சேர தூது விட்டிருந்த நிலையில் சுதாகரன் கைது விவகாரம் பெரும் புதிரை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவுடன் சேர முயற்சிப்பதாக வெளியாகும் செய்திகளைப் பொய்யாக்குவதற்கும், அ.தி.மு.க.வில் சேரமுயற்சிப்பதாகக் கூறி அ.தி.மு.க. தொண்டர்களைத் திசை திருப்பும் சுதாகரனின் முயற்சிகளைத்தடுப்பதற்காகவுமே இந்தக் கைது படலம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தி.மு.க.வினர் மட்டுமே அ.தி.மு.க. அரசால் கைது செய்யப்படுகின்றனர் என்ற பழியிலிருந்து தப்புவதற்காகவும்சுதாகரன் கைது படலம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முணுமுணுக்கப்படுகிறது.
சுதாகரன் கைது, அரசியல் அரங்கில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்பது மட்டும் உண்மை.
சுதாகரனின் தந்தையும் கைது
சுதாகரனின் தந்தையான விவேகானந்தனையும் திடீரென்று புதன்கிழமை மாலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications