ஜெ. முதல்வரான பின் முதல் தொட்டில் குழந்தை
சென்னை:
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பின் முதல் தொட்டில் குழந்தையாக கடலூர் மாவட்டத்தில் ஒரு பெண்சிசு அரசு வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் கடந்த ஆட்சிக்காலத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண் சிசுக்கள்அழிக்கப்படுவது மற்றும் கொல்லப்படுவதிலிருந்து காப்பதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால்தி.மு.க. ஆட்சி, இந்தத் திட்டத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டது.
தற்போது ஜெயலலிதா முதல்வராகியுள்ள நிலையில், சட்டசபையில் நடைபெற்ற ஆளுநர் உரையில், தொட்டில்குழந்தைத் திட்டம் மீண்டும் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழகம் முழுவதிலும் தொட்டில் குழந்தைத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு பெண் சிசு ஆதரவற்ற நிலையில் கிடந்தது.இந்தக் குழந்தையை எடுத்துப் பாதுகாத்தனர் மருத்துவமனை ஊழியர்கள். பின்னர் அவர்கள் இதுகுறித்து மாவட்டஆட்சியர் (கலெக்டர்) அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கலெக்டர் தங்கச்சாமி, பெண் சிசுவைக்கொண்டு வருமாறு பணித்தார்.
குழந்தை கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் அரசுக் காப்பகத்தில்அக்குழந்தையைச் சேர்க்க கலெக்டர் தங்கச்சாமி உத்தரவிட்டார்.
மாநில சமூக நலத்துறை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கும் இதுகுறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரதுஆலோசனையின் பேரில் அக்குழந்தை தற்போது சென்னை கருணைப்பிரியா அமைப்பிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications