அரிசி ஊழல்: விசாரணையைச் சந்திக்க திமுக தயார்
சென்னை:
ரூ.65 கோடி ரேஷன் அரிசி ஊழல் தொடர்பான விசாரணையைச் சந்திக்கத் தயார் என்று முன்னாள் திமுக உணவுஅமைச்சர் கே.என். நேரு கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றுக் கொண்டவுடனேயே, கஜானா காலி என்றும், களஞ்சியமும் காலி என்றும் கடந்ததிமுக அரசைக் குற்றம் சாட்டினார். ஆனால் 14 லட்சம் டன் அரிசி கையிருப்பு இருப்பதாக திமுக சார்பில் விளக்கம்அளித்தபோது, அதை மறுக்க முடியாமல் அரிசி இருக்கிறது, ஆனால் அவை எல்லாம் புழுத்துப் போயிருக்கிறதுஎன்று அப்போதிருந்த உணவு அமைச்சரின் பேச்சைக் கேட்டு சட்டசபையிலேயே அறிவித்தார்.
ஆனால் மறுநாளே, மத்திய அரசின் உணவுக்கழக மேலதிகாரி ஒருவர், அது நல்ல அரிசிதான் என்றுவெளிப்படையாக அறிவித்துவிட்டார். இவ்வளவுக்குப் பிறகும், தான் சொன்னதை எப்படியும் நிரூபிக்க வேண்டியகட்டாய நிலையிலே இருந்த ஜெயலலிதா, தவறான தகவலைச் சொன்ன உணவு அமைச்சரை முதலில்பதவியிலிருந்து நீக்கிவிட்டார். எங்கேயோ இருந்து ஓரளவு அரிசியை மட்டும் கொண்டு வந்து,செய்தியாளர்களிடம் காட்டி ரூ.65 கோடிக்கு புழுத்துப்போன அரிசியை திமுக அரசு வாங்கியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசைப் பொறுத்தவரை, அரிசியை நேரடியாக வாங்குவதே கிடையாது. நெல்லாக வாங்கி, அதை அரவைசெய்துதான் அரிசியாக்குவார்கள். இன்னும் சொல்லப் போனால், நெல் கொள்முதல் செய்வது மற்றும் அதைவிநியோகம் செய்வது நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பொறுப்பே தவிர, அரசுக்கும் அதற்கும் எந்தவிதமானசம்பந்தமும் கிடையாது. இதை அதிகாரிகளிடம் கேட்டு ஜெயலலிதா தெரிந்து கொள்ளலாம்.
திமுக அரசு மீது ஒரு களங்கத்தைச் சுமத்துவதற்காகவே ஜெயலலிதா முயற்சித்துள்ளார். தவிர, இதுகுறித்து லஞ்சஒழிப்பு புலனாய்வுத்துறை மூலம் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.
இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதால், இந்த விசாரணையைச் சந்திக்க நாங்கள் தயாராகஇருக்கிறோம். அதற்கு விளக்கம் அளிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார் நேரு.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications