Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ.யின் முன்னாள் வளர்ப்பு மகன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன் புதன்கிழமை அதிகாலைசென்னையில் கைது செய்யப்பட்டார்.

சுதாகரன் நற்பணி மன்றத்தின் மாநில அமைப்பாளராக இருந்த கோபி ஸ்ரீதரன் என்பவரை சுதாகரனும் அவரதுமைத்துனரும் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீதரனுக்கு தொலைபேசி செய்து அவரை தனதி வீட்டிற்கு வருமாறு அழைத்தார்சுதாகரன். இதையடுத்து ஸ்ரீதரன் தனது காரில் தனது உதவியாளர் முத்துராமன் என்பவருடன் சுதாகரன் வீட்டிற்குசென்றார்.

அங்கு சுதாகரன், அவரது மைத்துனர் மற்றும் 10 பேர் இருந்தனர். ஸ்ரீதரனிடம் பணம் கேட்டு துப்பாக்கியைக் காட்டிசுதாகரன் மிரட்டினார். இதைக்கண்டு பயந்துபோன ஸ்ரீதரன் தன் உதவியாளருடன் தப்பி வந்துவிட்டார்.

ஆனால் சுதாகரனின் மைத்துனரும் வேறு 6 பேரும் சபாரி கார் மூலம் ஸ்ரீதரனை துரத்தி வந்தனர். துப்பாக்கி,உருட்டை போன்றவற்றுடன் வந்து ஸ்ரீதரனையும், முத்துராமனையும் அவர்கள் தாக்கினர். துப்பாக்கியைக் காட்டிஅவரை கொன்று விடுவதாகவும் மிரட்டினர்.

ஸ்ரீதரனின் மனைவி போலீசுக்கு புகார் செய்ய முயன்றதும், அவர்கள் தப்பி ஓடி விட்டனர். காயமடைந்த ஸ்ரீதரன்இது குறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் செய்ததும், புதன்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு சுதாகரன்கைது செய்யப்பட்டார்.

சென்னை மாநகர காவல்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அவரைக் கைதுசெய்தனர். அவருடைய வீட்டிலிருந்து 1 பாக்கெட் அபினும் கைப்பற்றப்பட்டது.

அவர் முதலில் மாம்பலம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டார். பின்னர் சைதாப்பேட்டை காவல் நிலையத்ற்குகொண்டு செல்லப்பட்டார். அவர் மீது இ.பி.கோ. 307வது பிரிவின்படி, கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

பின்னர் அவர் சென்னை 11வது பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றகாவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சுதாகரன் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.

காயமடைந்த ஸ்ரீதரனும், அவரது உதவியாளரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னர் முதல்வராக இருந்தபோது, தன் தோழி சசிகலாவின் அக்காள் மகனான சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்துஎடுத்துக் கொண்டார் ஜெயலலிதா. அவருக்கு நடிகர் சிவாஜிகணேசனின் பேத்தியையும் திருமணம் செய்துவைத்தார். அந்த திருமணம் நாட்டையே ஒரு கலக்கு கலக்கியது. மிக விமரிசையாக அந்த திருமணம்நடைபெற்றது.

இதன் காரணமாகவே, 1996ல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, சுதாகரன் இனி தன் வளர்ப்பு மகன் இல்லை என ஜெயலலிதா அறிவித்துவிட்டார்.

தற்போது ஆட்சி பீடத்தில் அ.தி.மு.க. மீண்டும் அமர்ந்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ளார்.ஊழலற்ற ஆட்சி தருவேன் என உறுதியளித்த ஜெயலலிதா கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்களை தோண்டிஎடுத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்.

இந்நிலையில் சுதாகரன் கைது செய்யப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+