வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு கோருகிறார் நக்சல்
ஈரோடு:
சந்தன வீரப்பனுக்கு தமிழக அரசு பொதுமன்னிப்பு வழங்கினால், பழ. நெடுமாறன், முத்துக்குமார் ஆகியோருடன்தானும் சேர்ந்து வீரப்பனை தமிழக அரசிடம் ஒப்படைப்போம் என நக்சலைட் மணிகண்டன் கூறியுள்ளார்.
வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கு தொடர்பாக தமிழர் தேசிய இயக்கத்தைச்சேர்ந்த நக்சலைட் மணிகண்டன் ஈரோடு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன் பின் அவர் கூறும்போது:
வீரப்பனைப் பிடிக்க முடியாமல் தமிழக-கர்நாடக அரசுகள் திணறுகின்றன. வீரப்பனை பிடிப்பதற்காக மக்கள் பணம்ஏராளமாக செலவு செய்யப்பட்டு வருகிறது.
தேவாரம் அதிரடிப்படை தலைவராக இருந்த போது, அதிரடிப்படையினரால் பொதுமக்களுக்கு ஏற்பட்டஇன்னல்களை யாராலும் மறக்க முடியாது. இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் கூறமுடியாமல் இருக்கும்போது, மீண்டும்தேவாரத்தை அதிரடிப்படை தலைவராக ஜெயலலிதா நியமித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த அடிப்படையிலேயே எங்கள் மீதான விசாரணைகளும் தனிநீதிமன்றத்தில் நடத்தப்படக்கூடாது ரெகுலர் நீதிமன்றத்தில்தான் நடத்தப்பட வேண்டும். எங்களுக்கு வழங்கப்படவேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டால் நாங்கள் தனி நீதிமன்ற விசாரணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வோம்.
செயல்படாத இயக்கங்களான தமிழர் விடுதலை மீட்சிப்படை, தமிழர் விடுதைலப்படை ஆகியவற்றைத் தடைசெய்யவேண்டும் என மத்திய அரசிடம் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. அந்தஇயக்கங்களில் இப்போது யாருமே இல்லை. நான்கூட 2 நாட்களுக்கு முன் நெடுமாறன் தலைமையிலான தமிழர்தேசிய இயக்கத்தில் சேர்ந்து விட்டேன்.
எங்கள் மீது கர்நாடக அரசு தொடுத்துள்ள வழக்குகளை தமிழகத்திற்கு மாற்றுவதாக முந்தைய அரசுஉறுதியளித்தது. இதை அடிப்பயாைகக் கொண்டு, வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் 2 மாநில அரசுக்கும்எந்த விதமான பிரச்சனையும் இருக்காது.
வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக இருந்தால், நெடுமாறன், முத்துக்குமாருடன் நானும் சேர்ந்துவீரப்பனைத் தமிழக அரசிடம் ஒப்படைப்போம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications