பெங்களூர்... பெங்களூர்.... பெங்களூர்.....
பெங்களூர்:
பெங்களூர்... பெங்களூர் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? "பெந்த கல்லூரோ" அதாவது "வெந்த பட்டாணி"என்று அர்த்தம். இந்த "பெந்த கல்லூரோ"தான் மருவி "பெங்களூர்" ஆகிவிட்டது. சுதந்திரத்துக்கு முன் நம்மைஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேயர்கள்தான் இந்தப் பெயரை வைத்தனராம்.
உலகிலேயே பெங்களூர்தான் வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நகராகும். கடந்த 20 ஆண்டுகளில்அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது பெங்களூர்.
இந்தியாவின் "சிலிக்கன் வேலி" என்றுதான் பெங்களூரை அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு, இந்தியாவிலேயேஇங்குதான் அதிக அளவாக, 212 சாப்ட்வேர் கம்பெனிகள் உள்ளன.
மேலும், ஜப்பானின் ஒசாகா நகருக்கு அடுத்தபடியாக பெங்களூர் நகரில்தான் ஏராளமான சாப்ட்வேர் நிபுணர்கள்குவிந்து கிடக்கிறார்கள். அதேபோல், அமெரிக்காவுக்கு அதிக அளவு நிபுணர்களை அனுப்புவதும் பெங்களூர்தான்.அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் 60 சதவிகிதம் பேர் பெங்களூர்வாசிகள்.
ஒரு நகரில் 21 எஞ்சினிரிங் கல்லூரிகள் இருப்பது உலகத்திலேயே பெங்களூரில் மட்டும்தான். இது தவிர,உலகிலேயே அதிக அளவாக, 57 எஞ்சினிரிங் கல்லூரிகள் பெங்களூர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டுவருகின்றன. உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அதிக அளவில் செல்பவர்களும் இந்தப் பல்கலைக்கழகமாணவர்கள்தான்.
நாட்டிலேயே அதிக அளவாக பெங்களூர் விஞ்ஞானிகள்தான் உலகின் உயரிய நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றனர். அதேபோல், நாட்டிலேயே அதிக டாக்டர்களை பெங்களூர் பல்கலைக்கழகம்தான் உருவாக்குகிறது.
பெரும் பணக்காரர்களும் பெங்களூரில்தான் இருக்கின்றனர். ஆம். இங்கு ஏழை என்று சொல்லப்படுபவர்கள்ரொம்ப ரொம்பக் குறைவு.
உலகத்திலேயே பெங்களூரில் மட்டும்தான் போக்குவரத்து விமானங்களும், போர் விமானங்களும் ஒரே தளத்தில்இயங்குகின்றன. நாட்டிலேயே அதிக அளவில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ள ஒரே நகரமும்பெங்களூர்தான்.
உலகிலேயே மிகப்பெரிய சிவன் மற்றும் ஹனுமன் சிலைகள் பெங்களூரில்தான் உள்ளன. மேலும்,இந்தியாவிலேயே இந்த நகரத்தில் மட்டுமே அதிக அளவில் கோயில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகள்காணப்படுகின்றன.
உலகிலேயே பழமையான வடிகால் (drainage) திட்டங்களைக் கொண்டிருக்கும் பெங்களூர் நகர், 2ஆம்நூற்றாண்டில் உருவானதாக வரலாறு கூறுகிறது.
உலகிலேயே பாரீசுக்கு அடுத்த "பேஷன் கேபிடல்" என்று அழைக்கப்படும் நகரமும் பெங்களூர்தான். சிலகுறிப்பிட்ட வகை மாடல்களை அதிக அளவில் பெங்களூர் அளித்துள்ளது.
நாட்டிலேயே டெல்லி போலீஸுக்கு அடுத்தபடியாக, சிறப்பாகச் செயல்படுபவர்கள் பெங்களூர் போலீஸ்தான்.அதிக அளவு விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் இந்தியாவுக்கு அள்ளி வழங்கி வருகிறது பெங்களூர்.
இந்தியாவிலேயே பெங்களூரில்தான் அதிக அளவு ஆங்கிலோ-இந்தியர்கள் காணப்படுகின்றனர். கொடுமைஎன்னவென்றால், உள்ளூர் மக்களை மிகவும் குறைவாகக் கொண்ட நகரம் பெங்களூர் மட்டுமே. அதாவது, இங்கு38 சதவிகிதம் மட்டுமே கன்னடர்கள் உள்ளனர். 25 சதவிகிதம் தமிழர்களும், 14 சதவிகிதம் தெலுங்கர்களும், 10சதவிகிதம் மலையாளிகளும், 8 சதவிகிதம் ஐரோப்பிய நாட்டினரும், மற்றவர்கள் 5 சதவிகிதத்தினரும் பெங்களூரைநிறைத்துள்ளனர்.
உலகிலேயே அதிக 2 சக்கர வாகனங்களை பெற்றுள்ளதால், இந்தியாவிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்தநகரமாக பெங்களூர் கருதப்படுகிறது. இதில் இன்னொரு விசேஷம்... 2 சக்கர வாகனங்கள் அதிக அளவில் திருடுபோவதும் பெங்களூரில்தான்.
என்னதான் போக்குவரத்து நெரிசல் மிகுந்து இருந்தாலும், பெங்களூர் நகரம்தான் இந்தியாவிலேயே சுத்தமானநகரமாக விளங்குகிறது. இங்கு நிறைய தோட்டங்கள் இருப்பதால், பெங்களூர் நகரத்தை "கார்டன் சிட்டி" என்றேஅழைக்கிறார்கள். இந்நகரத்தின் 40 சதவிகிதப் பரப்பு தோட்டங்களாலும், பார்க்குகளாலுமே நிறைந்துள்ளது.மேலும், 15 சதவிகிதத்தை ஏரிகளும் குளங்களும் தம் வசம் வைத்துள்ளன.
வெப்பமான தென்னிந்தியாவில் இருந்து கொண்டு, எப்போதும் குளுமையாக இருக்கும் ஒரே நகரம்பெங்களூர்தான். உயர்ந்த அளவாக 34 டிகிரி செல்சியஸாகவும் குறைந்த அளவாக 14 டிகிரி செல்சியஸாகவும்இங்கு வெப்பநிலை பதிவாகிக் கொண்டிருக்கிறது.
இப்படிக் குளிராக இருக்கும் நகர மக்கள், குளிர் தெரியாமல் இருக்க சிகரெட் குடிப்பதைத் தவிர வேறு என்னசெய்வார்கள்? ஆம். இந்தியாவிலேயே பெங்களூரில்தான் அதிகமான மக்கள் சிகரெட் குடிக்கிறார்கள். சிகரெட்குடிக்கும்போது, அதற்கும் அவர்களுக்கு ஏதாவது துணைக்கு வேண்டுமே?! இருக்கவே இருக்கிறது உற்சாக பானம்.
பெங்களூர் நகரத்தில் விஸ்கி, பிராந்தி, பீர் கடைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆசியாவிலேயே அதிக அளவு"பார்"களைக் கொண்டதும் இந்நகரம்தான்.
கொ....கொ.....கொ....கொசுறுச் செய்தி: உலகிலேயே பெங்களூர் பெண்களுடைய "ஹிப்", அதாவது இடுப்பு,ரொம்பவும் பேமஸாம்! அதனால், இதை "ஹிப் சிட்டி" என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் சில கிளுகிளுப்புஆசாமிகள்!!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications