கோவையில் சீனப் பொருட்கள் விற்பனை
கோவை:
கோவையில் விற்பனைக்காக சீனப் பொருட்கள் வந்து குவிந்தன.
ஆனாலும், அவை அனைைத்தும் விற்றுத் தீர்ந்ததாலும், அதிகாரிகளின் கெடுபிடியாலும் கடை மூடப்பட்டு விட்டது.
இந்தியாவிற்கு சீனப்பொருட்கள் வருகை குறித்த பரபரப்பு கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ஏற்பட்டது. 2.50ரூபாய்க்கு பேட்டரி செல், 30 ரூபாய்க்கு பொம்மை, 6000 ரூபாய்க்கு கலர் டி.வி., 25 ஆயிரத்திற்கு மோட்டார் பைக்என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே செய்தி வெளியானது.
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் விலை மலிவான பொருட்கள், இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் எனஎதிர்பார்க்கப்பட்டது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சீனப்பொருட்கள் சமீபத்தில் கோவையில்விற்பனை செய்யப்பட்டன.
கோவையின் மையப்பகுதியான காந்திபுரம் அருகே உள்ள காட்டூரில், இந்தப் பொருட்களை விற்பனை செய்யஏபிசி மார்க்கெட்டிங் என்ற நிறுவனம் கடைவிரித்தது.
இந்தக் கடையில் கடந்த இரண்டு நாட்களாகக் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில், 100 ரூபாயிலிருந்து 130 ரூபாய்க்குகைக்கடிகாரம், 30 ரூபாய்க்கு பவுடர், 50 ரூபாய் முதல் 100 ரூபாய்க்குப் பொம்மைகள் ஆகியவை குவிந்தன.6000 ரூபாய்க்கு கலர் டி.வி., டேப்ரிகார்டர் போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.
இந்த பொருட்கள் விற்பனை பற்றி மாலைப் பத்திரிக்கை ஒன்றில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்துஅந்தக் கடை முன்பு கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியது.
இந்நிலையில் அதிகாரிகளும் அங்கு சென்று திடீரென எந்த அடிப்படையில் விற்பனை செய்கிறீர்கள் என வினாஎழுப்பியுள்ளனர். இதையடுத்து கடை இழுத்து மூடப்பட்டது. இரண்டு நாட்களுக்கு பொருட்கள் விற்பனைஇல்லை, பொருட்கள் தீர்ந்து விட்டன என நிர்வாகிகள் கூறினர்.
சிறு பொருட்களைத் தவிர, வேறு பொருட்கள் இங்கு விற்பனைக்கு வரவில்லை. குறிப்பாக அனைவரும்எதிர்பார்த்த இரண்டு சக்கர வாகனங்கள் வரவேயில்லை.
இது குறித்து கடை நிர்வாகி கூறுகையில், இரண்டு சக்கர வாகனங்கள் உட்பட பெரிய பொருட்கள் விரைவில்விற்பனைக்கு வரும் எனத் தெரிவித்தார். இந்தப் பொருட்களை விற்பனை செய்ய இன்னும் இந்திய அரசுமுறையான அனுமதி அளிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications