கோவையில் இருதய நோய் மாநாடு
கோவை:
கோவையில் இருதய நோய் பற்றி அகில இந்திய அளவிலான மாநாடு நடக்கிறது. இதில், 500க்கும் மேற்பட்டடாக்டர்கள் பங்கேற்கின்றனர்.
இருதய நோய் பற்றிய அகில இந்திய அளவிலான மாநாடு கோவையில் வரும் ஜூன் 16, 17 ஆகிய இரு நாட்கள்நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்திய அளவில் உள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் 500 பேர்பங்கேற்கின்றனர்.
கோவை ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் இந்த மாநாடு நடக்கிறது. இதனையொட்டி இருதய நோய் பற்றியசிறப்புக் கண்காட்சியும் இடம் பெறுகிறது. கோவையில் ஆண்டுக்கு 1500 பேருக்கும் மேல் இருதய அறுவைசிகிச்சை நடக்கிறது. இங்குள்ள முக்கிய மருத்துவமனைகள் மட்டுமே இந்த சிகிச்சையை அளிக்கும் வசதியைக்கொண்டுள்ளன. ஆஞ்சியோகிராம் என்ற பரிசோதனை ஆண்டுக்கு 5000 பேருக்கு மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, கோவையில் இந்த மருத்துவ மாநாட்டில் இருதய நோய்க்கான காரணங்கள் குறித்து விரிவான ஆய்வுநடத்தப்படும். மேலும், இந்த நோய் வராமல் தடுக்க எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளலாம், முதலுதவி பற்றியவிழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் முடிவு செய்யப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை இருதய நோய் மருத்துவ சங்கத்தின் டாக்டர் விஸ்வநாதன் செய்து வருகிறார். இதனைபாரதிய வித்யா பவன் சேர்மன் டாக்டர் கிருஷ்ணராஜ் வானவராயர் துவக்கி வைக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications