மதுரை அருகே ஓடும் பஸ்ஸில் கொள்ளை
மதுரை:
மதுரை அருகே, ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில் டிரைவரையும் ஒரு பயணியையும் கத்தியால் குத்தி,கொள்ளையடித்தவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லையில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் ஒன்று வந்துகொண்டு இருந்தது. கோவில்பட்டியை அந்த பஸ்அடைந்தபோது, 7 பேர் அதில் ஏறினார்கள்.
மதுரை ரிங் ரோட்டில், கருவேலம்பட்டி அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது, 7 பேரும் திடீரென எழுந்தனர்.அவர்கள் கையில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. ஒருவர் மட்டும் டிரைவரிடம் சென்று, கத்தியைக்காட்டி பஸ்ஸை நிறுத்துமாறு கூறினார்.
பஸ் நின்றதும், பயணிகளிடம் கத்தியைக் காட்டி, மிரட்டி பணம்-நகைகளைப் பிடுங்கினார்கள். பொருட்களைக்கொடுக்க மறுத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவராமன் என்ற பயணிக்குக் கத்திக்குத்து விழுந்தது. இதைத் தடுக்கமுயன்ற டிரைவர் சுப்பிரமணியும் கத்தியால் குத்தப்பட்டார். பின்னர் அந்த ஆசாமிகள் பஸ்ஸில் இருந்து குதித்து ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மோப்ப நாயும்வரவழைக்கப்பட்டது. காயமடைந்த 2 பேரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, போலீஸார் விசாரணை நடத்தி, கொள்ளையடித்த 7 பேரையும் தேடி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications