தந்தை வேலூரில்... தனயன் பாளையங்கோட்டையில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் வியாழக்கிழமை பாளையங்கோட்டை மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.
தனது உதவியாளரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள சுதாகரனைபாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்வியாழக்கிழமை பாளையங்கோட்டைக்குக் கொண்டு போகப்பட்டார்.
போலீஸ் வேனில் பலத்த பாதுகாப்புடன் கொண்டு போகப்பட்ட சுதாகரன், வியாழக்கிழமை பிற்பகல்பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவரைப் பார்க்க செய்தியாளர்கள் உள்பட யாரும்அனுமதிக்கப்படவில்லை.
சுதாகரனின் ஒரிஜினல் தந்தை விவேகானந்தனும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வேலூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications