மானியம் பெற தொழிலதிபர்கள் டெல்லி பயணம்
திருப்பூர்:
மத்திய அரசு ரத்து செய்த பனியன் தொழிலுக்கான மானியத்தை திரும்ப பெறும் முயற்சியாக கோவை எம்.பி.தலைமையில் 15 தொழிலதிபர்கள் பேச்சுவார்த்தைக்காக டில்லி சென்றுள்ளனர்.
திருப்பூர் பனியன் தாழிலுக்கு மத்திய அரசு "டிராபேக் என்ற ஏற்றுமதிக்கான மானியம் அளித்து வந்தது. இந்தமானியம், ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ரூ.52 ஆக இருந்த இந்தமானியத்தை ரூ.10 ஆக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனால், மானியத்தை நம்பி ஏற்றுமதியில் ஈடுபட்ட தொழிலதிபர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியசூழ்நிலை ஏற்பட்டது. எனவே, இந்த மானியத்தை திரும்பவும் அளிக்க வேண்டும் என தொழில் அமைப்புகளின்கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
எனவே, இந்த பிரச்னையைக்கு தீர்வு காண மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளை நேரில் சந்திக்கவும், பனியன்தொழிலில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து தெரிவிக்கவும் கோவை எம்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுடில்லி செல்கிறது.
இதில் முன்னாள் தமாகா எம்.எல்.ஏ.வும், திருப்பூர் பனியன் தொழில் அதிபர்களின் கூட்டமைப்புத் தலைவருமானமோகன் கந்தசாமியும் செல்கிறார். இந்தக் குழுவில் 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள், மத்திய அரசிடம், பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள 8 சதவீத வரியை விலக்க வேண்டும். ஏற்றுமதி மீதான16 சதவீத வரியையும் விலக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்துவர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications