வீரப்பன் விரைவில் சரணடைகிறார்?
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் விரைவில் சரணடையவிருப்பதாக கர்நாடக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தான் சரணடைய வீரப்பன் ஒப்புக் கொண்டிருப்பதாகக்கூறப்படுகிறது. வீரப்பன் இன்னும் தமிழக எல்லைப் பகுதிகளில்தான் நடமாடிக் கொண்டிருக்கிறார் என்றும்கர்நாடக உளவுத்துறை கூறுகிறது.
கடந்த மாதம் அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், வீரப்பனைப் பிடிப்பதைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள்தீவிரப்படுத்தப்படும் என்று ஆளுநர் அறிக்கையில் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, தன்னுடைய டெல்லிவிஜயத்தின் போதும், வீரப்பனைப் பிடிப்பதற்காக மத்திய அரசின் உதவியை நாடினார் தமிழக முதல்வர்ஜெயலலிதா.
மேலும், தமிழக, கர்நாடக சிறப்பு அதிரடிப்படைகளில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. அதிரடிப் படைகளின் 2மாநிலத் தலைவர்களும் மாற்றப்பட்டனர். கர்நாடக அதிரடிப்படைக்கு கெம்பையா தலைவராக நியமிக்கப்பட்டார்.தமிழக அதிரடிப்படைக்குத் தலைவராக முன்னாள் டிஜிபியான வால்டர் தேவாரம் மீசையை முறுக்கிக் கொண்டுமீண்டும் வந்துவிட்டார். இவருக்குத் துணையாக, அதிரடிப்படை ஐஜியாக முன்பிருந்த விஜயகுமாரேடெல்லியிலிருந்து கொண்டுவரப் பட்டுள்ளார்.
வீரப்பனைப் பிடிப்பதற்கான புதிய பல திட்டங்களைத் தீட்டுவதற்காக, 2 மாநில அதிகாரிகளும் கடந்ததிங்கள்கிழமை சென்னையில் கூடினர். திட்டங்களையும் அவர்கள் தீட்டிவிட்டதாகத் தெரிகிறது.
அநேகமாக, இந்த மாதம் 21ஆம் தேதி வீரப்பனைத் தேடி கூட்டு அதிரடிப்படை காட்டுக்குள் காலடி எடுத்துவைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான எல்லாத் திட்டங்களும் தயார் என்றும் அதிகாரிகள் கூறிவருகின்றனர். காட்டுக்குள் செல்வதற்கு முன்னர் மீண்டும் அதிரடிப்படைகள் கூடி விவாதிக்கும் என்றும் வால்டர்தேவாரம் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், வீரப்பன் சரணடையப் போவதாகக் கர்நாடக உளவுத்துறை கூறியிருப்பது 2 மாநிலத்தலைவர்களையும், அதிகாரிகளையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
வீரப்பனைப் பிடிப்பதற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கவிருக்கும் அதே வேளையில்,வீரப்பனைப் பிடிக்க உதவுபவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதுகுறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications