வீட்டுக்காவலில் காஷ்மீர் தலைவர்கள்
ஸ்ரீநகர்:
அகில இந்திய ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் அப்துல் கானி பட் மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர்சையத் அலி ஷா ஜிலானி ஆகியோர் வெள்ளிக்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து அப்துல் கானி பட் நிருபர்களிடம் கூறுகையில், வெள்ளிக்கிழமை அதிகாலை எங்களைப் போலீஸார்வீட்டுக் காவலில் வைத்தனர். எங்களை மசூதியில் நடந்த பிரார்த்தனையில் கலந்து கொள்ளக் கூடஅனுமதிக்கவில்லை.
எதற்காக அவர்கள் எங்களை வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் பந்த்நடத்துவதற்கு அழைப்பு விடுக்கவில்லை என்றார்.
இதே போல் ஷான்கஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் முன்னாள் தலைவர் சையத்அலி ஷா ஜிலானியை போலீஸார் கைது செய்தனர். சில மணி நேரங்கள் போலீஸ் காவலில் இருந்த அவர் பின்னர்வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து போராட்டம்நடத்த வேண்டும் என்று ஜிலானி அழைப்பு விடுத்ததால்தான் அவர் வீட்டுக்காவலில் வைத்துள்ளோம் என்றுபோலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போல் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி துணைத் தலைவர் ஜாவித் அகமது மிர் அவாமி கமிட்டியைச்சேர்ந்த ஷாகிதுல் இஸ்லாம் உள்பட பலர் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடைபெறாத வகையில், மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications