சந்திரிகா அரசுக்கு புதிய நெருக்கடி
கொழும்பு:
இலங்கையில் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த இலங்கை முஸ்லீம்காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வாபஸ் வாங்கத் தீர்மானம் எடுத்துள்ளதையடுத்து தனது பெரும்பான்மை பலத்தைநிருபிக்கும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது சந்திரிகா அரசு.
இலங்கை நாடாளுமன்றத்தில் மக்கள் கூட்டணியில் 7 கட்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ராஃப் ஹக்கீம்தலைமையிலான இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு 11 உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் கூட்டணிஅளித்திருந்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவைவாபஸ் வாங்கத் தீர்மானித்துள்ளது.
கல்முனை பகுதியில் முஸ்லீம்கள் அதிகமாக வாழ்வதால் அப்பகுதியை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரிஇலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது. இந்தக் கோரிக்கையை சந்திரிகா அரசு காதில் போட்டுக்கொள்ளாத காரணத்தால் முஸ்லீம் காங்கிரஸ் தங்களது ஆதரவை வாபஸ் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
முதலில் கல்முனைப் பகுதியை தனி மாவட்டமாக அறிவிக்க சந்திரிகா அரசு ஒப்புக் கொண்ட போதிலும், கடந்தவாரம் இந்தக் கோரிக்கை குறித்து ஒரு நபர் கமிஷன் அமைத்து ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்தது.இதில், திருப்தியடையாத இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெறும் முயற்சியில் தீவிரமாகஇறங்கியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் அஷ்ரப்பின் மனைவி பெரியல் அஷ்ரப்அமைச்சராக உள்ளார். அவர் ஹக்கீமின் இந்த முடிவுக்கு ஆட்சேபணை தெரிவித்ததுடன் மக்கள் கூட்டணியுடனானஉறவை முறித்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் தெரிகிறது.
இதற்கிடையே, பெரியல் அஷ்ரப் தலைமையில் நடக்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஹக்கீம்அழைக்கப்படுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதையடுத்து ஹக்கீம் இலங்கை முஸ்லீம்காங்கிரஸ் பொலிட் பீரோ உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பிரச்சனைகளைக் கேட்டறிவதற்காக அவர்களைசந்திப்பதாக உறுதியளித்துள்ளார் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications