கருணாநிதி -- தாமரைக்கனி சந்திப்பு
சென்னை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனி வெள்ளிக்கிழமை திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கருணாநிதியைச் சந்தித்து திமுகவில் இணைய விரும்புவதாக தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் அசைக்க முடியாத அரசியல்வாதியாக இருந்த தாமரைக்கனி கடந்த சட்டசபைத்தேர்தலில் சொந்த மகனாலேயே தோற்கடிக்கப்பட்டார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தாமரைக்கனி தேர்தல்தோல்வியையடுத்து திமுகவில் சேர முடிவு செய்தார்.
வழக்கு காரணமாக நிபந்தனை ஜாமீனில் இருந்த தாமரைக்கனிக்கு சில நாட்களுக்கு முன்பு நிபந்தனைதளர்த்தப்பட்டது. இதையடுத்து அவர் வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்தார். திமுக தலைமை அலுவலகமானஅண்ணா அறிவாலயத்திற்கு காலையில் வந்த அவர் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன்ஆகியோரைச் சந்தித்தார். அப்போது திமுகவில் இணைய விரும்புவதாக தெரிவித்தார்.
தாமரைக்கனி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மக்களின் அன்பைப் பெற்றவர். அந்தத் தொகுதியில் 5 முறை வெற்றிபெற்றவர்.
திமுகவில் சேர்ந்தது ஏன் என்பது குறித்து தாமரைக்கனி செய்தியாளர்களிடம் கூறுகையில், திராவிடஇயக்கங்களில் மூத்த இயக்கம் திக. தற்போதுள்ள அரசியல் தலைவர்களில் பண்பாடான, மூத்த, உண்மையானதலைவர் கருணாநிதிதான். மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் கருணாநிதி. அண்ணாவுக்குப் பிறகு திமுக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தபோது அமோகஆதரவுடன் தலைவரானவர் கருணாநிதி.
ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால் அனைத்துத் தரப்பினராலும் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கருணாநிதி மட்டுமே அதன் காரணமாகவே திமுகவில் இணைத்துக் கொள்ள முடிவு செய்தேன் என்றார்.
தாமரைக்கனியை திமுகவில் சேர்த்துக் கொள்வது குறித்து மாவட்ட திமுக செயலாளருடன் பேசி முடிவுசெய்யப்படும் என்று பின்னர் கருணாநிதி குறிப்பிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications