கருணாநிதி மீது அல் உம்மா புகார்
கோவை:
கருணாநிதி ஆட்சி காலத்தில் சிறையில் நாங்கள் சித்ரவதை செய்யப்பட்டோம் என்று அல் உம்மா இயக்கத்தின்பொதுச்செயலாளர் அன்சாரி புகார் கூறியுள்ளார்.
கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது. குண்டு வெடிப்புச் சம்பவம்தொடர்பான வழக்கில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா, பொதுச் செயலரான அன்சாரி ஆகியோர் உள்பட200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறையில் இருந்து வருகின்றனர்.
சிறையில் உள்ள அன்சாரி வெள்ளிக்கிழமை மாலை வேறு ஒரு வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில், அவர் அழைத்து வரப்பட்ட போலீஸ் வேனில் இருந்தபடியே நிருபர்களுக்குஅவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
குண்டு வெடிப்பு வழக்கில் நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறோம். இன்னும் விசாரணைதுவக்கப்படவில்லை.
சிறையில் உள்ள முஸ்லிம்கள் திமுக ஆட்சியில் சித்ரவதைக்குள்ளாகி இருப்பதாக முன்னாள் முதல்வர்கருணாநிதி மற்றும் உள்துறை செயலர்கள் மீது புகார் தெரிவித்துள்ளனர். இது அதிமுக செயலர் போட்ட வழக்கு.பாதிக்கப்பட்ட சிறையில் இருந்து வரும் முஸ்லிம்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை.
கருணாநிதி ஆட்சி காலத்தில் சிறையில் கொடுமை நடப்பதாக நாங்கள் பலமுறை நீதிமன்றத்தில் புகார் கூறியும்,காவல் துறையிடம் மனுக் கொடுத்தும் பயன் இல்லை. அப்போது எதிர்க் கட்சிகள் சட்டமன்றத்தில் புகார்கூறியதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணை வெறும் கண்துடைப்பாகவே முடிந்தது. நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சூரியனைக்கூட பார்க்க முடியவில்லை, இருட்டறைக்குள் இருந்து வருகிறோம்.
எங்கள் மீது தொடரப்பட்ட குண்டு வெடிப்பு வழக்கு 3 ஆண்டுகளாகியும் இன்னும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, அதிமுக ஆட்சியில் நல்லது நடந்தால் சரி என்றார் அன்சாரி.
தற்போது அல் உம்மா இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications