மீண்டும் பிரச்சனையில் காவிரி
பெங்களூர்:
காவிரி நீர் பிரச்சனை மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது.
காவிரி டெல்டா பகுதியில் ஏரிகளைத் தூர்வாரும் பணிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது என்று கர்நாடகநீர்ப்பாசனத்துறை அமைச்சர் குமார் பங்காரப்பா நிருபர்களிடம் கூறியுள்ளதையடுத்து, அவருடைய இலாகாபறிக்கப்பட்டுள்ளது. இதுதான் காவிரி நீர் பிரச்சனையை மீண்டும் தூண்டி விட்டுள்ளது.
தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு சம்பந்தமாக நீண்ட காலமாக பிரச்சனை இருந்துவருகிறது.
மாநிலங்களுக்கிடையேயான நதி நீர்ப் பிரச்சனைகளைத் தீர்க்க, பிரதமர் தலைமையில் நதி நீர் ஆணையம் ஒன்றும்செயல்பட்டு வருகிறது. இருப்பினும், காவிரி நீர் குறித்து அவ்வப்போது அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தைநடத்துவது, இரு மாநிலங்களிலுமே தேவையில்லாமல் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
காவிரி பிரச்சனைக்காக, முந்தைய ஆட்சிக் காலத்தில் உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தியவர்ஜெயலலிதா. தற்போது மீண்டும் அவர் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவுடன், காவிரி நீர் சம்பந்தமானபேச்சுக்களும் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
பிரதமர் சந்திப்பின் போதும், காவிரி பிரச்சனை குறித்து பிரதமரிடம் ஜெயலலிதா பேசியுள்ளார்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா நிருபர்களிடம் பேசியபோது, கிருஷ்ணராஜ சாகர்அணையில் நீர்மட்டம் குறைந்திருப்பதால், காவிரி நதி நீர் ஆணையத்தின் இடைக்கால உத்தரவுப்படிதமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
கிருஷ்ணாவின் இப்பேச்சு கர்நாடக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இம்மாநில சிறியநீர்ப்பாசனத்துறை அமைச்சர் குமார் பங்காரப்பாவுடைய இலாகாவைப் பறித்துக் கொண்டார் கிருஷ்ணா.
காவிரி டெல்டா பகுதியில் ஏரிகளைத் தூர்வாரும் பணிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நடுவர்நீதிமன்றத்தில் காவிரி நீர்ப் பிரச்சனை இருப்பதால், இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குமார் பங்காரப்பாநிருபர்களிடம் கூறியுள்ளார்.
மத்திய அரசின் தடையை வெளிப்படுத்தியது, கர்நாடகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால், குமார்பங்காரப்பாவின் நீர்வள சீரமைப்பு இலாகாவை முதல்வர் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். இலாகாபறிக்கப்பட்டாலும், சிறிய நீர்ப்பாசனத்துறை அமைச்சராக குமார் பங்காரப்பா நீடித்து வருகிறார்.
உலக வங்கி கடனாக வழங்கிய ரூ.996 கோடி மூலம்தான் ஏரிகளைத் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.நீர்வள சீரமைப்பு இலாகா மூலம்தான் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் குமார்பங்காரப்பாவுடைய இந்த இலாகா பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முதல்வரோ, நீர்வளச் சீரமைப்புத் துறை என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தால், உலக வங்கிமற்றும் மத்திய அரசின் உதவிகளை சுலபமாகப் பெறலாம் என்பதற்காகவே அந்த இலாகாவை எடுத்துக்கொண்டதாகக் கூறினார்.
எது எப்படியோ, காவிரி நீர் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது என்பது மட்டுமே எல்லோருக்கும்வெளிப்படையாகத் தெரியும் உண்மை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications