மாப்பிள்ளை ஓட்டம்: திருமணத்துக்கு வந்த வாலிபர் பெண்ணை மணந்தார்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை:

Tablaதிருமண நாளன்று மாப்பிள்ளை வீட்டைவிட்டு வெளியேறியதால் திருமணத்தைப் பார்க்க வந்திருந்த வாலிபர் திடீர்மாப்பிள்ளையானார்.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை செக்கடி காலனியைச் சேர்ந்தவர் தங்கராசு. இவர் ஆடுதுறை பேரூராட்சியில் துப்புரவுபணியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகன்கள் விஜயகுமார் மற்றும் கார்த்திக். அண்ணன்-தம்பி இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்யநிச்சயம் செய்யப்பட்டது. அதன்படி, ஜூன் 10 ம் தேதி திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது.

அண்ணன் விஜயகுமாருக்கு மயிலாடுதுறை பெரியகுளம் கீழக்கரையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின்மகள் குருவம்மாளையும், தம்பி கார்த்திக்குக்கு காட்டு மன்னார்குடி புளியந்தோப்பு தெரு ஜி.கிருஷ்ணமூர்த்தியின்மகள் தனலெட்சுமியையும் பேசி முடித்தனர்.

திருமண பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டன.

ஆடுதுறை மருதகாளியம்மான் கோவிலில் திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி திருமணத்திற்குமுதல்நாள் இரவு பெண் வீட்டினரும், மாப்பிள்ளை வீட்டினரும் கோவிலுக்கு வந்தனர்.

ஆனால் மாப்பிள்ளை விஜயகுமார் திருமண மண்டபத்துக்கு வரவில்லை. இரவு முழுவதும் தேடியும் அவரைக்கண்டுபிடிக்க முடியவில்லை.

திருமண நாளன்று முகூர்த்த நேரம் தாண்டியும் விஜயகுமார் வரவில்லை. இதையடுத்து நிச்சயிக்கப்பட்டபடி,விஜயகுமாரின் தம்பி கார்த்திக்குக்கும் தனலெட்சுமிக்கும் திருமணம் நடந்தது.

ஆனால் விஜயகுமார் காணாமல் போய்விட்டதால் அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மணப்பெண் குருவம்மாள்தவியாய் தவித்தார். அவரது பெற்றோர்களும் செய்வதறியாது திகைத்தனர். அந்தக் குடும்பமே கண்ணீரில்மூழ்கியது.

இந்த நிலையில் பெண் வீட்டாரின் தவிப்பை கண்டு மனம் உருகிய திருமணத்தைக் காண வந்திருந்த மணிகண்டன்என்பவர், குருவம்மாளின் பெற்றோரை அணுகி, இரு வீட்டினரும் சம்மதித்தால் தான் குருவம்மாளைத் திருமணம்செய்து கொள்வதாகக் கூறினார்.

இதையடுத்து குருவம்மாளின் பெற்றோர்கள் மணிகண்டனின் சொந்த ஊரான திருநாகேஸ்வரத்திற்குச் சென்றுஅவரது பெற்றோரிடம் பேசினர்.

அவர்களும் இந்தத் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து குருவம்மாளுக்கும், மணிகண்டனுக்கும்அதே கோவிலில் திருமணம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+