கோவையில் தேசிய மருத்துவ கருத்தரங்கு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை சார்பில் ரத்த நாளங்கள் குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்குநடக்கிறது.

கோவையில் மருத்துவ வளர்ச்சியின் ஒரு அங்கமாக நவீன மருத்துவமனை வசதிகள் பெருகி வருகின்றன. இந்தநவீன மருத்துவமனைகள் ஒவ்வொன்றும் ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் 5 சர்வதேச கருத்தரங்குகள், மற்றும்தேசிய அளவிலான கருத்தரங்குகளை நடத்துகின்றன.

இந்த கருத்தரங்குகளில் குறிப்பிட்ட நோய் பற்றிய நிபுணர்கள், டாக்டர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களில்வெளிநாட்டு டாக்டர்களும் கலந்து கொண்டு கருத்துப் பறிமாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

இது குறித்து டாக்டர் தாமஸ் கே.ஆப்ரகாம் கூறியதாவது:

நமது உடலில் இருதயத்தின் பணி முக்கியமானது. இந்தப் பணிக்கு ரத்த நாளங்கள் மிகவும் இன்றியமையாதது.

ஒரு பாதையில் தூய்மையான ரத்தம் இருதயத்திற்குள் செல்கிறது. மற்றொரு பாதையில் அதுதூய்மைப்படுத்தப்பட்டுஉடல் முழுவதும் செலுத்தப்படுகிறது. இதற்கு ரத்தக் குழாய்கள் மிகவும் இன்றியமையாதது. இந்த ரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும். இந்த ரத்தக் குழாய்களில் கட்டிஏற்பட்டால், அடைப்பு ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்கவும், இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், புதிய யுக்திகளைக் கையாள்வது குறித்த கருத்தரங்குகோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை ஜூன் 16ம்தேதி கருத்தரங்கு ஒன்றை நடத்துகிறது.

இந்த மருத்துவமனையில் ரத்தநாளங்கள் நோய் சிகிச்சைக்கென தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவுநடத்தும் தேசிய அளவிலான கருத்தரங்கில் சென்னை, மும்பை டாக்டர்கள் கலந்து கொள்கின்றனர். கோவைமெடிக்கல் சேர்மன் நல்ல பழனிச்சாமி தலைமை வகிக்கிறார் என்றார்.

இந்த பேட்டியின்போது மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் வி.ரமேஷ், யு.கே அனந்தபத்மநாபன் ஆகியோர்உடனிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+