டெல்லியில் குண்டு வைக்க முயற்சி: ஒசாமா பின் லேடன் கூட்டாளிகள் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்தை குண்டு வைத்து தகர்க்கமேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

டெல்லியிலுள்ள சிறப்பு போலீஸ் படையினர், உளவுத்துறை அதிகாரிகள் உதவியுடன் தீவிரவாதிகளின் முயற்சியைமுறியடித்தனர். இது தொடர்பாக ஒசாமா பின் லேடனின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நிஜாமூதீன் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இவர்களை டெல்லி துணை கமிஷனர் ராஜ்பீர்சிங் கண்காணிப்பில், இன்ஸ்பெக்டர் சந்த் சர்மா தலைமையிலான டெல்லி சிறப்பு போலீசார் வெள்ளிக்கிழமை இரவுகைது செய்தனர்.

இவர்கள் இருவரும் அமெரிக்க தூதரகத்திற்கு முன் கார் ஒன்றில் வெடிகுண்டை வெடிக்க வைத்து தூதரகத்தைதகர்க்க திட்டமிட்டிருந்தார்கள். அதற்காக கார் ஒன்றை அவர்கள் தேடிக் கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர்.

இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், அமெரிக்க தூதரகம், சோமாலியா, எகிப்து மற்றும் சூடான் நாட்டில்குன்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமானவர் ஒசாமா பின் லேடன்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரும் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள்.இவர்கள் இருவரையும பின் லேடன்தான் அனுப்பி வைத்திருக்கிறார். இவர்களிடமிருந்தது சக்திவாயந்தவெடிகுண்டு கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரில் அப்துல் ராஃப் ஹவாஷ் என்பவர் சூடான் நாட்டுக்காரர். இவர் ராஜஸ்தான் மாநிலம்,உதய்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். மற்றொருவர் ஷமின் சர்வார் என்பவர் என்றனர்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பே அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என டெல்லி உளவுத்துறையினருக்கும், போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டிருந்தனர்.

இப்போது தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு விட்டது. இவர்களை போலீசார்விசாரித்த போது நாங்கள் அடிக்கடி டெல்லிக்கு வருவோம். அப்போது தூதரக அலுவலக ஏரியாவை தீவிரமாககண்காணித்து வந்தோம் என கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+