"டிரா பேக்" குறைப்புக்கு பனியன் ஆலைகள் எதிர்ப்பு
திருப்பூர்:
திருப்பூரில் "டிரா பேக் குறைக்கப்பட்டதை எதிர்த்து தொகுதி முழுவதும் வரும் ஜூன் 21 ம் தேதி பந்த் நடத்தஅனைத்துக் கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகள் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன. இந்த தொழிற்சாலை அதிபர்கள்ஏற்றுமதிக்காக சுங்க வரி செலுத்துகின்றனர். ஏற்றுமதிக்குச் செலுத்தப்படும் இந்த சுங்க வரியில் 15 சதவீதத்தைஊக்கத் தொகையாக மீண்டும் அவர்களுக்கு அரசு வழங்கும். இந்த முறைக்கு "டிராபேக்" என்ற பெயர் உண்டு.
இந்த சலுகை இதுவரை 15 சதவீதமாக இருந்து வந்தது. இந்த சலுகையைத் தற்போது மத்திய அரசு 15சதவீதத்திலிருந்து 9.5 சதவீதம் முதல் 5.5 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் கடும்பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பலர் ஏற்றுமதியை நிறுத்த வேண்டிய சூழ்நிலையிலும் உள்ளனர்.
இதனால் திருப்பூரில் தொழிற்சாலைகள் பல இயக்கப்படமால் மூடப்படக் கூடும். தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள் எனவும் அரசியல் கட்சிகள் கருதின.
இது குறித்த பொதுவான விவாதம் அனைத்துக் கட்சிகளின் சார்பாக நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். திருப்பூர் நகரச் சேர்மன் செல்வராஜ் (திமுக), சக்திவேல்(அதிமுக), காமராஜ் (சிபிஎம்), பழனிச்சாமி (சிபிஐ), தங்கவேல் (தமாகா), சேகர் (மதிமுக), தண்டபாணி (காங்கிரஸ்),ராஜேந்திரன் (பாமக) ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் "டிராபேக்" சலுகையை மத்திய அரசு குறைத்ததைத் திரும்ப வழங்கவேண்டும் . இதனை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தைக் கவர, வரும் ஜூன் 21ம் தேதி அனைத்துக்கட்சிகளின் சார்பில் திருப்பூர் தொகுதி முழுவதிலும் பந்த் நடத்த தீர்மானிக்கப்படுகிறது. அன்று காலை 6 மணி முதல்மாலை 6மணி வரை இந்த பந்த் நடக்கும் என முடிவு செய்யப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications