சென்னைக்கு ரயிலில் வருகிறது குடிநீர்
சென்னை:
ஈரோட்டிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பிரச்சினையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலம், ஈரோட்டிலிருந்து ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் நெய்வேலியிலிருந்து தினசரி 500 லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டுவிநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
ஈரோட்டிலுள்ள காவிரி ஆற்றுப் பாலம் அருகே குடிநீர் பம்ப் செய்யப்பட்டு லாரிகள் மூலம் எடுக்கப்படுகிறது.பின்னர் இந்த குடிநீர் ஈரோடு லோகோ ஷெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு சிறப்பு ரயில்களில் உள்ளவேகன்களில் குடிநீர் நிரப்பப்படுகிறது.
பின்னர் இந்த சிறப்பு ரயில்கள் சென்னை வில்லிவாக்கத்திற்கு வந்து சேரும். அங்கிருந்து குழாய்கள் மூலம்கீழ்ப்பாக்கம் குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு, பின்னர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்செய்யப்படும்.
கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இந்த முறையில்தான் குடிநீர் விநியோகம்செய்யப்பட்டது. குடிநீர் விநியோக வசதிக்காக பல குழாய்கள் மற்றும் பிற வசதிகளை ஜெயலலிதா உத்தரவின்பேரில் அதிகாரிகள் செய்திருந்தனர். ஆனால் அதற்குப் பின் வந்த கருணாநிதி அரசு அதை சரியாகபராமரிக்காமல் விட்டு விட்டது. இதனால் பழுதடைந்துள்ள அந்தக் குழாய்களை சரி செய்யும் பணி தற்போதுதீவிரமாக நடந்து வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications